சபையானது உபத்திரவத்திற்கு முன்னரே சென்றுவிடுமா? 58-0309E 1. இப்பொழுது ஜெபத்திற்காக அப்படியே சற்று நேரம் நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 2 மகா பரிசுத்தமும், நீதியுமுள்ள தேவனே, உம்முடைய அன்பின் தயவிற்காக நாங்கள் உமக்கு நன்றி கூற விரும்புகிறோம். ஏனென்றால் அது எங்களுக்கு ஜீவனைக் காட்டிலும் மேலானதாயிருக்கிறது. நீர் இன்றிரவு எங்களை மிகச் சிறப்பான ஒரு வழியில் சந்தித்து, உம்முடைய ஆசீர்வாதங்களை எங்களுக்கு, தந்தருள வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் வியாதியாயிருப்பவர்களுக்கும், வேதனையுற்றிருப்போருக்கும் உதவி செய்யும்படியாக நீட்டப்பட்டுள்ள எங்கள் அன்பின் இரட்சகரின் மகத்தான கரத்தைக் காண்போமாக. இன்றிரவு பாவத்தின் பாதையில் களைப்புற்றிருப்பவர்களுக்கு ஒரு நல்வரவேற்பளிக்கும் கரத்தைத் தாரும். அவர்கள் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகின்ற பிதாவின் வீட்டிற்கு அவர்களை அழையும். 3 இடுக்கமும், வழி நெருக்கமாயிருக்கிற பாதையிலிருந்து விலகித்திரிகின்றவர்கள் மீண்டுமாக பிதாவின் ஐக்கியத்திற்குள் திரும்பிவரும்படி நினைத்தருளும்படியாய் நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறோம். 4 கர்த்தாவே, சுவிசேஷத்தைக் கேட்கும்படியாய் ஜனங்களின் செவிகளை திறந்தருளும்படியாகவும், நீர் பேசுபவரின் உதடுகளை விருத்தசேதனம் செய்யும்படியாகவும் நாங்கள் ஜெப்பிக்கிறோம். நாங்கள் உம்முடைய மகிமைக்காக உபயோகப்படுத்தப்படுவோமாக. இந்த ஆராதனையின் முடிவில் நாங்கள் எங்களுடைய பல்வேறு பட்ட இடங்களுக்கு செல்கையில், “வழியிலே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று எம்மாவூரிலிருந்து வந்தவர்கள் கூறினதுபோல நாங்கள் கூறுவோமாக. நாங்கள் இதை உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 5 நான் இன்றிரவு பரிசுத்த லூக்கா 17ம் அதிகாரத்தில், 26வது வசனத்திலிருந்து துவங்கி சில வேத வாக்கியங்களை வாசிக்க விரும்புகிறேன். நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். 6 நான் ஒரு பாடப் பொருளுக்காக ஆதியாகமம் 19ம் அதிகாரத்திலிருந்து 22வது வசனத்தை எடுத்து வாசிக்க விரும்புகிறேன். தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார். 7 இந்தக்காலையில் நான் வரப்போகும் நியாயத்தீர்ப்புகளைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். எனவே இன்றிரவும் நான் அதைத் தொடர்ந்து பேச விரும்புகிறேன். சர்வவல்லமையுள்ள தேவனின் நெருக்கமான நியாயத்தீர்ப்பின் உஷ்ணமான காற்றை நம்மால் உணர முடிகிறது. நாம் இந்தக் காரியங்களை உணரத் துவங்குகையில் அது நாம் எங்கே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்றும், நாம் எந்த வேளையைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்பதை கவனிக்கும் விதத்தை நமக்கு இன்றியமையாததாக்குகிறது. 8 கொஞ்ச காலத்திற்கு முன்னர் இந்தியாவிற்கு சென்று வந்தது என்னுடைய சிலாக்கியமாயிருந்தது. நான் இந்தியாவிற்கு வருவதற்கு சற்று முன்னர் அங்கே பெரிதான பூமி அதிர்ச்சி உண்டாயிருந்தது. பூமி அதிர்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே எப்படியாய் பறவைகளுக்கு ஏதோ காரியம் தவறாயிருந்தது என்பதை அறிந்துகொள்ளும்படி அவைகளுக்கு தெரியவரலாயிற்று என்பதை நான் இந்தியாவில் செய்தித்தாள்களில் வாசித்துக் கொண்டிருந்தேன். பெரிய கட்டிடங்களிலும், பெரியதான கற்களைக் கொண்ட சுவர்களிலும் உள்ள பிளவுகளில் வாழ்ந்து வந்த எல்லா சிறிய பறவைகளும் அதை அறிந்துகொண்டன. இந்தியாவில் அதிகமாக கற்பாறைகளைக் கொண்ட சுவர்களே உள்ளன. அந்தப் பிளவுகளில் தங்களுடைய கூடுகளை வைத்திருந்த எல்லா சிறிய பறவைகளுமே அந்த சுவர்களை விட்டுச் சென்றுவிட்டன. எல்லாக் கால்நடைகளுமே வழக்கமாக பெரிய கட்டிடங்களையும், பெரிய கற்சுவர்களையும் சுற்றியே மதிய நேரத்தில் வழக்கமாக நிழலுக்காக நிற்கும். ஆனால் பூமி அதிர்ச்சி உண்டாவதற்கு ஏறத்தாழ இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்த எல்லா மிருகங்களும், சிறிய பறவைகளும் வயலின் மத்தியில் நிற்கும்படிச் சென்றுவிட்டன. 9 நீங்கள் பாருங்கள், அதைக் குறித்த ஏதோ காரியம் இருந்தது. அதாவது தேவன் தம்முடைய சிறிய பறவைகளையும் தம்முடைய மிருகங்களையும் குறித்து கவனித்துப் பாதுகாத்துக் கொண்டிருந்தார். அதே தேவன் பூர்வநாட்களில் அவைகளை பேழைக்குள் வழிநடத்தினார். நோவாவின் பிரசங்கத்தினால் அவைகள் ஜலத்தினால் அழிக்கப்பட்டபோது இருந்த அதே தேவனே இன்றைக்கும் இன்னமும் ஜீவிக்கிறார், ஆளுகை செய்கிறார். அவர் தம்முடைய சிருஷ்டிகளின் மேல் அவருடைய ஆதிக்கத்தை உடையவராயிருக்கிறார். 10 நான், “தேவன் தம்முடைய சிறிய பறவைகள், தம்முடைய கால்நடைகள் மற்றும் ஆடுகளை பூமி அதிர்ச்சி தாக்குவதற்கு முன்னரே அழிவிலிருந்து அவைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதைக் குறித்து அவ்வளவு கவனமுள்ளவராக இருந்தாரானால், அவருடைய ஆவியினால் பிறந்து, அவருடைய இரத்தத்தில் கழுவப்பட்ட தம்முடைய பிள்ளைகளைக் குறித்து அதிக கவனமுடையவராய் இருப்பது அதிக நிச்சயமல்லவா? அவர் அவர்களுக்காக கவனமுள்ளவராயிருக்கிறார்” என்பதை சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவர் அந்த சிறிய பறவைகள் தங்களுடைய வாசஸ்தலங்களிலிருந்து செல்லும்படி எச்சரித்தது போலவே, அவர் இன்றைக்கு தம்முடைய ஜனங்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறார் என்று நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். அவருடைய வருகையின் மகத்தான அடையாளங்கள் சமீபமாயிருக்கிறதை நாம் காண்கையில் தேவன் இந்த கடைசி நாளில் தம்முடைய ஜனங்களை ஒரு மகத்தான அழைப்பிற்கு ஒன்று சேர்த்து வரும்படி எச்சரித்துக் கொண்டிருக்கிறார் என்றே நான் விசுவாசிக்கிறேன். 11 இன்றிரவு என்னுடைய பொருள் என்னவெனில்; சபையானது உபத்திரவத்திற்கு முன்னரே சென்று விடுமா? என்பதேயாகும். 12 இப்பொழுது அது நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் கால தாமதமாய் உள்ளது. அது அமெரிக்காவில் கிட்டத்தட்ட மிகவும் தாமதமாகிவிட்டது என்று நான் நம்புமளவிற்கு அது மிகவும் காலங் கடந்ததாயிருக்கிறது. நாம் சரியாக பாதையின் முடிவிலே இருக்கிறோம். நான் இந்தக் காலையில் பாபிலோனும், அதனுடைய நிலைமைகளும் என்பதன் பேரில் பிரசங்கித்துக் கொண்டிருக்கையில் இன்றிரவு வேதாகமத்தில் உள்ள சிலவற்றைக் கொண்டு வந்து, கர்த்தருடைய வருகைக்கு நாம் எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம் என்பதைக் காட்டினால் மிகவும் நலமாயிருக்கும் என்றே நான் எண்ணினேன். நம்மால் நம்முடைய இயற்கையான கண்ணைக்கொண்டு ஏதோ காரியம் சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்பதைக் காண முடிகிறது. 13 ஜனங்களுக்கு மத்தியில் அப்படிப்பட்ட ஒரு—ஒரு குழப்பம் இருக்கிறது. எனவே ஒரு எழுப்புதலை ஏற்படுத்த முயற்சிப்பதே சற்று கடினமாயிருக்கிறது. சபைகளோ மிகவும் வித்தியாசப்பட்டவைகளாகவும், ஸ்தாபனத் தடைகளினிமித்தமாக ஒன்றுக் கொன்று ஒற்றுமையின்றி காணப்படுகின்றன. கிறிஸ்தவர்களோ மிகவும் மனவுரமற்றவர்களாயும், நிலைகுலைந்தவர்களைப் போன்றும் தென்படுகின்றனர். ஆனால் அது விநோதமாயிருக்கிறது என்பதை நீங்கள் அறீவீர்கள். ஏனென்றால் நம்முடைய கர்த்தர், “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்றார். 14 நாம் அவருடைய மகத்தான இரக்கத்தைக் காண்கிறபடியால், அவருடைய கரத்தின் மகத்தான அடையாளங்களையும், அற்புதங்களையும் காணும்படியாக நாம் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறபடியால், அதைக் கவனிக்கும்படியாக ஒரு சில நிமிடங்களிலேயே நம்முடைய கண்கள் திறக்கப்படும். ஆகையால் அது வேதாகமத்தின் தேவன் இன்றைக்கும் அப்படியே ஜீவிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும்படியான மிகுந்த பயபக்தியுடன் கூடிய இந்த ஆறுதலை நமக்கு அளிக்கிறது. அவர் தம்முடைய பிள்ளைகளை நேசிக்கிறார். அவர் அவர்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறார். ஆவிக்குரிய சிந்தை கொண்டவர்கள் வெளியே வருவார்கள். 15 இயேசுவானவர் பேசிக்கொண்டிருந்த நாளில், அவர், “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல, லோத்துவின் நாட்களில் நடந்ததுபோல” என்று கூறினதை நாம் கவனிக்க வேண்டும். 16 இப்பொழுது ஒவ்வொரு இணைப்பின் நேரத்திலும் தேவன் எப்பொழுதுமே ஒரு நியாயத்தீர்ப்பின் அழைப்பிற்கு முன்பாக ஒரு இரக்கத்தின் அழைப்பையே கொடுத்து வருகிறார். 17 இப்பொழுது நீங்கள் வரலாற்றாசிரியர்களாயிருப்பீர்களானால் நலமாயிருக்கும். நான் இந்த வாரமும், கடந்த வாரமும் இல்லை மூன்று வாரங்களாக சரித்திரத்தை ஆய்ந்து படித்துக் கொண்டிருந்தேன். அது நிசாயா ஆலோசனை சங்கத்திற்கு முன்னிருந்த சபையின் பூர்வீக சரித்திரமான நிசாயா பிதாக்களுக்கு முந்தின சபை சரித்திரமாகும். அதன் பின்னரே இருளின் காலங்களான ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளிலேயே கத்தோலிக்க சபை உருவாகியிருந்தது. நான் அதை நிசாயா பிரமாணங்களில் இல்லை நிசாயா ஆலோசனை சங்கத்திற்கு முன்னர் என்ற புத்தகத்தில் காண்கிறேன். அதாவது இன்றைக்கு நாம் இருக்கிற அதே மாதிரியை அவர்கள் உடையவரகளாயிருந்தனர். ஓ, அது எப்படியாய் மீண்டும் திரும்ப நிகழ்கிறது. 18 சபையின் நிலைமையும், ஜனங்களின் நிலைமையும், காலங்களின் அடையாளங்களையும் காணும்படியாக எங்கும் எழுதப்பட்டிருக்கின்றன. 19 இப்பொழுது ஒவ்வொரு இணைப்பின் நேரத்திலும் தேவன் ஏதோ காரியத்தை செய்வதற்கு முன்னர் அவர் எப்பொழுதுமே இரக்கத்தையும், ஒரு தூதனையும், ஒரு தீர்க்கதரிசியையும், ஒரு செய்தியையும் அனுப்புகிறார். ஆனால் அதே சமயத்தில் அது ஒவ்வொரு முறையும் இகழ்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சபையானது அதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறதில்லை. 20 நோவா, அவர் இங்கே நோவாவைக் குறித்துப் பேசினார். அவன் நூற்றிருபது வருடங்கள் பிரசங்கித்தான். அவனுடைய செய்தியானது இரக்கமானதாயிருந்தபோதிலும் ஜனங்கள் அவனுடைய போதனைக்கு செவிக்கொடுக்கத் தவறிப்போய்விட்டனர். அதுவோ அவர்களை இரட்சிப்பதற்கான ஏதோ காரியமாயிருந்தது. அதே சமயத்தில் அவர்களோ செவிகொடுக்க மனதில்லாதிருந்தனர். அது இன்றைய காலத்தின் மிக அழகான காட்சியாயிருக்கவில்லையா? 21 இப்பொழுது நீங்களோ என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம், அந்த அழகான காட்சியையே நீர் எங்களுக்கு உருவகப்படுத்தி காட்டிக்கொண்டிருக்கிறீர் என்று எப்படி கூற முடியும்?” என்று கேட்கலாம். 22 அது மனநிறைவாயிருக்கிறது, ஏனென்றால் கர்த்தராகிய இயேசு தம்முடைய சபைக்காக சீக்கிரமாய் வருகிறார். மேலும் அது தேவனுடைய எந்த சிருஷ்டியும் இந்தக் குழப்பத்திலிருந்து வெளியே வந்து அவருடைய அசீர்வதிக்கப்பட்ட மகிமைக்குள்ளாக பிரவேசிப்பதைக் குறித்து சிந்திக்கக்கூடிய மிக அழகான சிந்தையாயிருக்கிறது. அங்கே வயோதிபர் வாலிபமாயிருப்பர், வியாதியுள்ளோர் எப்பொழுதுமே சுகமடைந்தவர்களாயிருப்பர். அங்கே துக்கங்களோ அல்லது மனநோயோ இருக்காது. நான் சிந்திக்கக்கூடிய மிக அழகான காரியமாய் அது இருக்கவில்லையா? அந்தக் கூடுகையின் நேரத்திற்காக காத்திருப்பவர்களுக்கு அது எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்கிறது. 23 இப்பொழுது இயேசுவானவர் நோவாவின் நாட்களில் இருந்ததை திரும்பவும் குறிப்பிட்டுக் கூறினார் என்பதை நாம் கண்டறிந்தோம். எனவே நாம் சற்று திரும்பிச் செல்வோமாக. ஏனென்றால் அவர், “அந்த நாளை திருஷ்டாந்தமாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார். 24 இப்பொழுது காயீனும், ஆபேலும் இருந்தனர். காயீன் ஆபேலைக் கொன்றபோது சேத் அவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டான். சாத்தான் வரவேண்டியிருந்த அந்த வித்தை அழிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் என்பதை நாம் கண்டறிகிறோம். அதாவது தேவன், “ஸ்திரீயினுடைய வித்து சர்ப்பத்தினுடைய வித்தின் தலையை நசுக்கும்” என்று வாக்குப் பண்ணியிருந்தார். சாத்தான் அந்த ராஜரீக வித்தை அழிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் ஆபேலை அழித்தபோது அவன் அதைச் செய்து விட்டதாக எண்ணிக்கொண்டான். ஆனால் அவனுடைய ஸ்தானத்தில் தேவன் சேத்தை எழுப்பினார். கிறிஸ்துவின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் மற்றும் இராஜரீக வித்து வருவதையும் குறித்து மிக அழகான ஒரு காட்சி. 25 ஆகையால் காயீனின் பக்கமிருந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது கவனிக்கும்படி குறிப்பிடத்தக்கதாயிருக்கிறது. அவர்கள் மிகவும் பக்தியுள்ளவர்களாயிருந்தனர். அவர்கள் சபைக்குச் செல்லுகிற ஜனங்களாயிருந்தனர். எனவே காயீனும் சபைக்குச் செல்கிற ஒரு நபராகவே இருந்தான். அவன் கர்த்தரை ஆராதித்தான். அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அவன் சபையை சார்ந்திருந்தான். அவன் தன்னுடைய கடன்களைச் செலுத்தினான். அவனை நோக்கிப் பார்க்கக்கூடிய ஒரு மனிதனுக்கு அவன் ஒவ்வொரு கூற்றிலும் ஒரு உண்மையான விசுவாசியாகவே இருந்தான். 26 ஆனால் மூன்று பிரிவுகளைக் கொண்ட ஜனங்கள் மட்டுமே உள்ளனர். அது விசுவாசிகள், அவிசுவாசிகள், பாவனை விசுவாசிகள் என்பதாகும். இன்றிரவும் உலகத்தில் அவர்கள் அப்படியே முழுமையாக இருக்கின்றனர். 27 காயீன் வெறுமென பாவனை விசுவாசியாயிருந்தான். அவனுடைய வழிமரபிலிருந்து மிகுந்த பக்தியோடு சபைக்குச் செல்லும் ஒரு பெரிய கூட்ட மனிதர்கள் தோன்றினர். 28 இப்பொழுது இது மிகவும் வழக்கத்திற்கு மாறானதாயிருக்கிறது. ஆனால் அவனுடைய பக்கத்திலிருந்தே நாகரீகப் பண்பாடும், கல்விகற்ற இனமும் தோன்றினது என்பதை கவனித்தீர்களா? வேதம் அதைத் தெளிவாகக் கூறுகிறது. அவர், “அவர்கள் கட்டிடங்களை கட்டிக்கொண்டிருந்தனர் என்றும், அவர்கள் பெரிய காரியங்களை செய்து கொண்டிருந்தனர்” என்றும் கூறினார். விஞ்ஞானம் காயீனின் வழிமரபிலிருந்தே உண்டானது. மகத்தான விஞ்ஞானமும், வைத்தியர்களும், மகத்தான மனிதர்களும் காயீனின் வழிமரபிலிருந்தே தோன்றினர். 29 அங்கே மற்றொரு பக்கம் ஏழ்மையும், நாட்டுப்புற மாதிரியைக்கொண்ட ஜனங்களுமாயிருந்தனர். ஆனால் அவர்கள் தங்களுடைய தேவன் உண்மையானவர் என்று விசுவாசித்த ஜனங்களாயிருந்தனர். ஓ, தேவனே அவர்களோடே எங்களையும் கணக்கிட்டுக் கொள்ளுமே! 30 முடிவின் நேரத்திற்கு சற்று முன்னரே ஒரு பெரிய குழப்பம் இருந்தது. அப்படியே இன்றைக்கு உள்ளதுபோலவே பெரிய சபையின் பக்கமோ பெரிய குழப்பமும், விஞ்ஞானத்தின் மூலமோ வெற்றியடைந்தது போன்றும் காணப்பட்டது. 31 மற்றொரு மகத்தான காரியம் என்னவெனில், அவர், “கட்டிடங்கள் இருந்தன” என்றார். இப்பொழுது உள்ளது போன்றே அவ்வளவு மகத்தான கட்டிடங்கள் சரித்திரத்தில் எந்த ஒரு நேரத்திலுமே இருந்து வந்ததேயில்லை. இது முடிவு நேர அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. நாம் ஒருபோதும் இதைப் போன்ற ஒரு கட்டிட காலத்தைப் பெற்றிருந்ததேயில்லை. இப்பொழுது இங்குள்ள நமுடைய சிறு பட்டணத்திலும்கூட முயல் வேட்டைக்குச் செல்லும்படியான போதிய ஒரு இடத்தை என்னால் எங்குமே கண்டறியப்படவே முடியவில்லையே. இது முழுவதுமே வீடு கட்டுகின்ற திட்டங்களாகவும், அப்படியே கட்டுதலும், குடியிருப்பை அமைத்தலுமாயிருக்கிறது. நாம் நம்முடைய கண்களைத் திறப்போமேயானால் அது முடிவுக்கு சமீபமாயிருக்கிற தேவனுடைய அடையாளக் கம்பங்களில் ஒன்றாக இருக்கிறதைக் காணலாம். 32 நாம் இந்தக் காலையில் நிலவினைச் சுற்றிவரும் செயற்கை கோள்களின் பேரிலும், ஏவுகணைகளின் பேரிலும் பிரசங்கித்துக் கொண்டிருந்தோம். எப்படி அவர்களால் மாஸ்கோவில் நின்று கொண்டு, மாஸ்கோவையே விட்டுச் செல்லாமல், லூயிவில்லிலுள்ள நான்காவது தெருவிற்கு மத்தியில் ஒரு ஏவுகணையை ஏவமுடிகிறது என்பதை பிரசங்கித்தோம். அது பூமியில் நூற்று எழுபத்தைந்து அடி ஆழமும், நூற்றைம்பது மைல் சுற்றளவும் கொண்ட ஒரு குழியை அது வெடித்து உண்டாக்குமாம். அப்படிப்பட்டதான பெரிய குழியாய் இருக்குமாம். அவைகளில் மூன்று முழு உலகையுமே அழித்துவிடுமாம். பூமியானது தன்னுடைய கோளப்பாதையிலிருந்து அசைந்துவிடுமாம். விஞ்ஞானம் எதன் பட்சத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்தீர்களா? அது துன்மார்க்கத்தின் பக்கமாகத்தான் இருக்கிறது. 33 தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வேண்டிய ஒவ்வொரு காரியத்திற்கும், அவர்கள் அவரையே நம்பியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் நாமோ மனித கரத்தையே நம்பியிருக்க விரும்புகிறோம். நான் கல்வி கற்ற எந்தக் குழுவும் உருவாக்கும் ஸ்தாபனம், “இதுதான் வழி” என்று கூறுவதை ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் கிறிஸ்துவில் என்னுடைய நம்பிக்கை கட்டப்பட்டிருக்கவும், அவருடைய கிருபையும், இரக்கத்தின் பேரிலும் என்னுடைய பயபக்தியான உறுதி நிலையை தெரிந்து கொள்ளவுமே விரும்புகிறேன். கிறிஸ்து “நானே, வழியும், சத்தியமும், ஒளியுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்றார். 34 எனவே இது ஒரு மகத்தான கல்வியின் நாளாய் இருப்பதை உங்களால் காணமுடியும். இது ஒரு பெரிய உலகப்போராட்டமான நாளாய் இருக்கிறது. ஆயினும் அதற்கு மத்தியில் அவர்கள் இப்பொழுது நாம் பெற்றிருக்கிறதைக் காட்டிலும் மகத்தான உலகப் பூர்வமான விஞ்ஞான உலகைப் பெற்றிருந்திருக்க வேண்டும். அவர்கள் கூர்நுனி கோபுரங்களைக் கட்டினர். நாம் அந்த கூர் நுனி கோபுரத்தைக் கட்டும் ஒரு பொருளையும் பெற்றிருக்கவில்லை. நீங்கள் அதற்கு அருகில் எப்போதாவது சென்று பார்த்திருந்தால் நலமாயிருக்கும். நான் அதை எகிப்திலும் மற்றும் மெக்ஸிகோவில் உள்ள ஒன்றையும் சென்று பார்த்திருக்கிறேன். அவைகள் நகர வட்டாரங்கள் அளவு கொண்ட உயரத்திற்கு ஆயிரக்கணக்கான டன்கள் எடை கொண்ட பெரிய கற்பாறைகளை உச்சியில் கொண்ட மகத்தான, மிகப்பெரிய கட்டிடங்களாயிருக்கும். அந்த கற்களுக்குக்கிடையே ஒரு சவரக் கத்தியைக் கூட நுழைக்கமுடியாத அளவுக்கு அந்தக் கற்கள் அவ்வளவு பரிபூரணமாக வெட்டிச் செதுக்கி பொருத்தப்பட்டிருக்கின்றன. அது தேர்ச்சி வாய்ந்த முறையில் வெட்டப்பட்டிருந்தது. ஓ, என்னே ஒரு விஞ்ஞான நாளாயிருந்தது. மேலும் அது பூமியின் மத்தியில் அவ்வளவு பரிபூரணமாக பொருத்தப்பட்டிருக்கிறபடியால் சூரியன் எங்கேயிருந்தாலும் கவலையில்லை. ஏனெனில் அதனைச் சுற்றி ஒரு நிழலும் ஒருபோதும் இருக்காது. இன்றைக்கு நம்முடைய நவீன விஞ்ஞானத்தில் அதற்கு ஈடாக முடியுமா என்று நான் சந்தேகப்படுகிறேன். 35 ஆனால் இயேசுவானவரோ, “அந்த நாளில் இருந்ததைப் போலவே, தேவகுமாரனுடைய வருகையிலும் இருக்கும்” என்றார். இப்பொழுது நோவா நூற்றிருபது வருடங்கள் பிரசங்கித்தான். ஆனால் அவன் எள்ளி நகையாடப்பட்டான் என்பதை கவனியுங்கள். 36 இப்பொழுது, இயேசுவும் கூட, “லோத்தின் நாட்களில் இருந்தது போலவே இதுவும் இருக்கும்” என்றார். லோத்தின் நாட்களில், அவர்கள் புசித்துக்கொண்டும், குடித்துக்கொண்டு, பெண் கொண்டும், பெண் கொடுத்துக்கொண்டும், வீடுகளைக் கட்ட திட்டமிட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும், விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டுமிருந்தனர். 37 ஓ, இன்றைக்கு உபயோகப்படுத்தப்பட்ட கார்களின் கூட்டு வியாபாரம் மற்றும் மற்ற ஒவ்வொரு காரியத்தின் கூட்டு விற்பனையைப் போல அவ்வளவு வணிகத்தொடர்பு கொண்ட நாளாய் அது ஒருபோதும் இருக்கவில்லை. நீங்கள் இந்த வருடம் ஒரு குளிர்காப்புப் பெட்டியை வாங்க ஏறத்தாழ நான்கு அல்லது ஐந்து டாலர்கள் செலுத்தி வாங்கினால், அடுத்த வருடம் எவருமே விரும்புகிறதில்லை. ஏனென்றால் அது பழைய மாதிரியாகிவிடுகிறது. வாணிக உலகமானது உங்களை இடைவிடாது கடுமையாக பணிபுரிய கட்டாயப்படுத்துகிறதை நீங்கள் காணவில்லையா? உங்களால் இந்த வருடம் ஒரு காரை வாங்கமுடியும், அடுத்த வருடம் அது நீங்கள் வாங்கினதுபோன்றே அவ்வளவு நன்றாக இருந்தாலும், அதற்கு ஆயிரம் டாலர்கள் மதிப்பு குறையும், ஏனென்றால் அவர்கள் அதற்கு வண்டிப்பொறியின் வெப்ப மாற்றளவு மூடியை அல்லது அதற்கு ஏதாவது சற்று சிறிய அற்பமான ஒன்றை சேர்த்து மாற்றியிருப்பார்கள். அது வேதாகமத்தை நிறைவேற்றும் ஒரு விற்பனைப் பேச்சாக மட்டுமே உள்ளது. “நோவாவின் நாட்களிலிருந்ததுபோல, லோத்தின் நாட்களில் இருந்ததுபோல இருக்கும்.” 38 ஒவ்வொரு முறையும் தூதர்கள் தோன்றும்போதும், தீர்க்கதரிசிகள் எழும்பும்போதும் அவர்களுடைய செய்தியானது எப்பொழுதுமே கிருபையாயும், இரக்கமாயும், விடுவிக்கிறதுமாகவே இருந்து வருகிறது. தேவனுடைய செய்தியானது எப்பொழுதுமே முடிவின் நேரத்திற்கு சற்று முன்னதான விடுதலையாகவே இருந்து வருகிறது. அதனை வேத வாக்கியங்களினூடாக சரிபார்த்துக் கொள்ளுங்கள். நோவா எவ்வாறு விடுதலையை பிரசங்கித்தான். மேலும் அவர்கள் அதை பிரசங்கித்தவர்களை நகைத்து, அவர்களை ஏளனஞ்செய்து இகழ்ந்தபடியால் அவர்கள் பரியாசம் பண்ணப்பட்டனர். 39 அது அவர்களுடைய நாட்களில் இருந்த வண்ணமாகவே இன்றைக்கும் இருக்கிறது. கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார் என்றும், அவர் தம்மை காண்பிப்பதாக அவரே வாக்களித்தார் என்றும் ஒரு செய்தியோடு செல்லும்போது, அந்நாளிலிருந்த செய்திக்கு அவர்கள் செய்தவண்ணமாகவே இவர்களும் இந்த செய்திக்கு இந்நாளில் செய்கிறார்கள். 40 லோத்து சோதோமிற்குள் சென்று தன்னுடைய இனத்தாரை தூதனுடைய செய்திக்கு செவிகொடுக்கும்படிச் செய்ய தன்னால் இயன்றளவு முயற்சித்தான். ஆனால் அவர்களோ அவனை பரியாசம் பண்ணினதோடு அவன் ஏளம் செய்து கொண்டிருக்கிறான் என்றும் கூறினர். 41 ஓ, அது இந்நாளின் என்னே ஒரு காட்சியாயிருக்கிறது! நீங்கள் தேவனுடைய விடுதலையின் செய்திக்கு அவர்களை அழைத்து வரும்பொழுது, அவர்களோ, “நீங்கள் மார்க்கத்தைக் குறித்து ஏளனஞ்செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஏதோ காரியத்தை பாவனை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார்கள். அதே மாதிரியான ஒரு கூட்டமாயிற்றே! நாம் என்னே மணி நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்? “அப்படியிருந்தும் அவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படப்போகிறார்கள் என்றே அவர்கள் கருதுகிறார்கள். மேலும் அவர்கள் மாத்திரமே சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே அவர்கள் எண்ணுகிறார்கள்.” 42 இயேசு, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” என்றார். அது என்னுடைய வார்த்தை அல்ல. அது அவருடைய வார்த்தையாயிருக்கிறது. 43 கவனியுங்கள், அது இதே மாதிரியான செய்தியாயிருந்தது என்பதை நீங்கள் துரிதமாக கவனிக்க விரும்புகிறேன். ஓ, இது என்னுடைய இருதயத்தையே அப்படியே சிலிர்க்கச் செய்கிறது. சோதோம் கொமோரா அவ்வளவாய் தீட்டுப்பட்டு, நெறிமுறை ஒழுங்குகள் எல்லாவிடத்திலும் தாறுமாறாக்கப்பட்டிருந்தன என்றே நான் கருதுகிறேன். 44 ஆனால் முடிவான, பெரிய அழிவிற்கு சற்று முன்னர் தேவன் ஒரு தீர்க்கதரிசியை அங்கே அனுப்பினார். நான் அதைக் குறித்தும்கூட சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர் அங்கு ஒரு தூதனை அனுப்பினார். நீங்கள் அந்த தூதனுடைய செய்தியைக் கவனிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடன் தன்னுடைய வழியைத் தெரிந்து கொண்டிருந்த ஆபிரகாம் விளைச்சலற்ற நிலங்களாயிருந்த வனாந்திரத்திலே அமர்ந்திருந்தான். 45 லோத்து சோதோமிற்குச் சென்று நகரத்தின் பெருநகராண்மைக் கழகத்தலைவரானான். மேலும் அவன் பாவத்திற்கு மத்தியிலே ஒரு மகத்தான மனிதனாக இருந்தான். நான் மிகவும் பாராட்டுக்குரிய புகழுடையவனாயிருப்பதைக் காட்டிலும் தேவனோடு சரியாயிருக்கவே விரும்புவேன். ஆனால் லோத்து மிகவும் பாராட்டுக்குரியவனாயிருந்தான். அவன் வீதியில் உள்ள நகர வாசலில் அமர்ந்திருந்தான். அவன் உள்ளே வரக்கூடியது எது என்பதற்கும், உள்ளே வரக்கூடாதது எது என்பதற்கும் நியாயாதிபதியாயிருந்தான். மேலும் அவன் வேசித்தனங்களை தன்னுடைய ஜீவியத்தில் கண்டவனாகவும், அப்படிப்பட்ட காரியங்கள் தன்னுடைய நகரத்தில் சம்பவிக்கிறதை அறிந்தவனுமாயிருந்தான். 46 அது நம்முடைய தேசத்தில் உள்ள இன்றைய ஒரு காட்சியாய் இல்லையா? தணிக்கை செய்யப்படாத நிகழ்ச்சி நிரல்கள், எல்லாவிதமான அறிவற்ற நடத்தைகளும், கயமைத்தனங்களும், சூழ்ச்சித்திறன்களும் உள்ளதே! ஓ, அவர்கள் அதை தகர்த்தெறிய வேண்டுமென்றிந்தால் அவர்கள் அதை செய்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைச் செய்ய விரும்புகிறதில்லை. அவர்கள் அதைச் செய்ய முடியாது. ஏனென்றால் அது இந்த விதமாய் இருக்கும் என்று தேவன் கூறினார். அவர்கள் தங்களுடைய கண்களை மட்டும் திறந்து பார்க்க முடிந்தால், அதைப் புரிந்து கொள்ளக்கூடுமே! 47 கவனியுங்கள், பெரிய கடுஞ்சோதனையான வேளைக்கு சற்று முன்னர் ஆபிரகாமும், சாராளும் சிந்தூர மரத்தின் கீழே அமர்ந்திருந்தனர். அவர்கள் ஓர் நாள் அங்கிருக்கையில், சாராள் சில மனிதர்கள் வருகிறதைக் கண்டாள். உடனே அவள் கூடாரத்தை நோக்கிச் சென்றுவிட்டாள். 48 இந்நாளின் ஸ்திரீக்கு அது என்ன ஒரு வித்தியாசமாய் இருக்கிறது. ஆனால் அது சோதோமில் எவ்வளவு வித்தியாசமாய் இருந்திருக்கும். புருஷர்கள் வீட்டிற்கு வருகின்ற நேரத்தில் அவர்கள் தங்களுடைய அரைகுறையான ஆடைகளை அணிந்து, வெளியே சென்று புல்வெட்டுகிறார்கள். என்னே ஒரு வித்தியாசம்! 49 ஆனால் சாராளோ கூடாரத்திற்குச் சென்றுவிட்டாள். அவள் கூடாரத்திற்கு சென்றபோது இந்த புருஷர்கள் வந்தனர். ஆபிரகாம் அவர்களை நோக்கிப் பார்த்தான். சரியாகக் கூறினால் அவர்கள் காண்பதற்கு வினோதமாக இருப்பவர்களைப் போன்று தோன்றினர். அவர்களில் ஒருவர் சார்புரிமைப் பேச்சாளரைப் போல காணப்ப்பட்டார். அவர் கீழே அமர்ந்தபோது அவர் ஆபிரகாமோடு பேசத்துவங்கினார். 50 ஆபிரகாம், “இங்கே அமர்ந்திருங்கள், நான் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து உங்களுடைய கால்களை கழுவட்டும். நான் கொஞ்சம் அப்பத்திற்கு மாவு பிசைகிறேன், நாங்கள் ஆயத்தம் செய்த பிறகு நீங்கள் அப்பத்தைப் புசித்துவிட்டு அப்புறம் நீங்கள் போகலாம்” என்றான். 51 ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடி, கொழுத்த இளங்கன்றை கண்டு அதை அடித்தான். பின்னர் சாராளிடத்தில் மாவு பிசைந்து அப்பங்களைச் சுடச் சொன்னான். 52 அவன் அந்த மனிதரிடத்தில் பேசினான். ஆபிரகாம் ஏதோ ஒரு வகையில் அவர் யாராயிருந்தார் என்பதை அறிந்திருந்தான் என்று நான் நம்புகிறேன். பேசிக்கொண்டிருந்த அந்த மனிதன் தன்னுடைய முதுகை கூடாரப்பக்கமாக திருப்பியிருந்தார். அவரே அந்நாளின் செய்தியாளனாயிருந்தார். அப்பொழுது அவர், “ஆபிரகாமே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் செய்த வாக்குத்தத்தத்தின்படியே நான் உன்னை சந்திக்கப்போகிறேன். நான் உனக்கு ஒரு வாக்குத்தத்தம் பண்ணினேன். நான் அதனை நிறைவேற்றப்போகிறேன்” என்றார். 53 ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. தேவன் இந்தக் கடைசி நாட்களில் அவர் மாம்சமான யாவர் மேலும் தம்முடைய ஆவிவை ஊற்றுவதாக ஒரு வாக்குத்தத்தத்தை பண்ணினார். எனவே அவர் அதனை நிறைவேற்றுவார். இயேசு, “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்” என்றே ஒரு வாக்குத்தத்தத்தை உண்டு பண்ணினார். அவர் நீதியுள்ளவராயிருக்கின்றபடியால் அவர் அதனை நிறைவேற்றுவார். 54 ஆபிரகாம் அவரை நோக்கிப் பார்த்தான். அப்பொழுது அவர், “சரியாக அடுத்த மாதம் இந்நேரத்தில் ஒரு உற்பவ காலத்திட்டத்தில்,” அதாவது சாராளோடு இருந்து, “நான் உன்னை சந்திக்கப் போகிறேன். நான் வாக்குப்பண்ணின ஒரு பிள்ளையை சாராள் பெறப்போகிறாள்” என்றார். இப்பொழுது, ஆபிரகாம் நூறு வயதுடையவனாகவும், சாராள் தொண்ணூறு வயதுடையவளாகவும் இருந்தாள். 55 சாராள் தூதனுக்கு பின்னாக கூடாரத்தின் உட்புறத்திலிருந்து நகைத்தாள். 56 தூதனானவர் தன்னுடைய முதுகை கூடாரப்பக்கமாக திருப்பியிருந்தும், “சாராள் ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். அது செய்தியாளனாயிருந்தது. [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஏழுமுறைகள் தட்டுகிறார்—ஆசி.] ஓ, நான் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவருடைய முதுகு கூடாரப்பக்கமாக திரும்பியிருக்க, அவளுடைய உட்புறத்தை அறிந்தது எந்தவிதமான மனோதத்துவமாயிருந்தது? அவள் நகைத்தாள். அப்பொழுது அவர், “அவள் ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். அவர் அதை அறிந்து கொண்டார். அது சோதோம் கொமோரா சுட்டெரிக்கப்படுவதற்கு முன்னான கடைசி செய்தியாயிருந்தது. இன்றிரவு சகோதரனே, நீ இதை கேட்பாயானால், இப்பொழுது இந்த உலகம் சுட்டெரிக்கப்படுவதற்கு முன்னான கடைசி செய்தி இதுவேயாகும். தூதனின் சுபாவத்தைப் பார்த்தீர்களா? அந்த தூதனாயிருந்தவர் யார்? அது தேவனே. 57 நினைவிருக்கட்டும், ஆபிரகாம் அவரை, “ஆண்டவரே” என்றழைத்தான். அங்கே மொழிப்பெயர்ப்போ, “ஏலோஹும், மகத்தான வல்லமையுள்ள யேகோவா” என்றேயுள்ளது. அது மாம்சத்தில் தோன்றின இயேசு கிறிஸ்துவாயிருந்தது. 58 யாரோ ஒருவர், “அது மாம்சத்தில் தோன்றின இயேசு கிறிஸ்துவாய் இருந்தது என்று நீர் கூறுகிறீரோ? அவர் எப்படி அந்த சரீரத்தைப் பெற்றுக்கொண்டார்?” என்று கேட்டார். 59 ஏன்? அவர் அந்த இரண்டு தூதர்களை அழைத்தார். பின்னர் அவர் கொஞ்சம் சுவாசத்தை இந்தவிதமாய் ஊத அணுக்களும், சுண்ணகமும், சாம்பலுப்புமாக ஒன்றுசேர்ந்து உருவாக காபிரியேல் அந்த ஒன்றில் அடியெடுத்து வைத்தான். பின்னர் மற்றொரு தூதன் மற்ற ஒன்றில் அடியெடுத்து வைத்தான். அதன் பின்னர் அவர் தமக்காக ஒன்றை உருவாக்கினார். 60 அவருடைய பரிசுத்த நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. அதே சர்வ வல்லமையுள்ள தேவன் தாம் வாசம் செய்யும்படிக்கு ஒரு சரீரத்தை உண்டாக்கின அவரில் என் நம்பிக்கையிருக்கிறபடியால், அவர் செய்வதாக வாக்களித்திருக்கிறபடியால், என்றோ ஓர் நாளில் அவர் இந்த ஒன்றையும் எழுப்புவார் என்பதை அறிந்து கொள்வதில் இன்றிரவு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 61 அவர் அங்கு செய்த அதே காரியத்தை செய்வதற்காக அவர் நம் மத்தியில் இருக்கிறார். ஓ, அவருடைய மகிமையான நாமத்தை ஸ்தோத்தரியுங்கள். அவர் நமக்கு எச்சரிப்பை கொடுத்துக் கொண்டும், நம்மிடத்தில் பேசிக்கொண்டும், நம்மை ஆயத்தப்படும்படி சொல்லிக்கொண்டிருக்கிறார். உண்மையாகவே அவர், “இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள்; ஏனெனில் நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்” என்றார். நாம் என்னே ஒரு வேளையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். 62 கவனியுங்கள், அக்கினியை வருவித்த தூதனே அந்த அற்புதத்தை நிகழ்த்தினவராய் இருந்தார். அடுத்த முறை உலகமானது அக்கினியினால் அழிக்கப்படப்போகிறது என்பதை நாம் யாவரும் அறிவோம். சோதோம் கொமராவிற்கு அனுப்பப்பட்ட தூதனவர்…இயேசு என்ன கூறினார் என்பதை நோக்கிப் பாருங்கள். ஓ, அதை நினைத்துப் பார்க்கையில் அது அப்படியே என்னுடைய ஆத்துமாவை சிலிர்ப்பூட்டுகிறது. “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்”. [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஏழுமுறைகள் தட்டினார்.—ஆசி.] அந்த தூதன் என்ன செய்தார்? அவர் பகுத்தறிதலின் ஆவியை உடையவராயிருந்தார். எனவே அவர், “அப்பொழுது இருந்தது போலவே, பரலோகத்திலிருந்து மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படுகின்றபோதும் அவ்வண்ணமே இருக்கும்” என்றார். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? அதே தேவனுடைய தூதனானவர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இப்பொழுது நம்முடைய நடுவில் நிற்கிறார் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவேயல்லாமல் வேறொருவருமில்லை. அது “அந்நாளில் இருந்தது போலவே” நம் மத்தியில் இருக்கிறது. அவர் தேவனாயிருந்தார். அது அழிவு உண்டாவதற்கு சற்று முன்னதான அவருடைய செய்தியாயிருந்தது. 63 இப்பொழுது அது ஒரு விடுதலையின் செய்தியாயிருந்தது என்பதை நாம் கவனிப்போம். ஆனால் அவர்களோ அவருக்கு செவி கொடுக்க மறுத்தனர். 64 இன்றைக்கு நம்முடைய ஜனங்களின் மத்தியிலும், நம்முடைய தேசத்திலும் அதே காரியம்தான் உள்ளது. கூட்டங்களில் அற்புதங்களையும், அடையாளங்களையும், மகத்தான காரியங்களையும் செய்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுவைக் காணும் சிலாக்கியத்தை நான் உடையவனாயிருக்கிறேன். மகத்தான, அழிவில்லாத, எல்லையற்ற தேவன் தற்பொழுது அதே விதமான ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பதை ஜனங்கள் உண்மையாகவே மேடையில் நின்று, சிறிதளவும் சந்தேகமின்றி அறிந்து கொள்கின்றனர். ஆனாலும் அவர்கள் அங்கே நின்றுகொண்டு சவ்வு மிட்டாயை மென்று கொண்டு கவலையற்றவர்களாய் மேடையை விட்டு நடந்து செல்கிறார்கள். அவர்கள் கவலைப்படுகிறதில்லை. 65 ஒரு மனிதன் அவரைப் பற்றின ஆவிக்குரிய நிலையைப் பெற்றிருந்து அல்லது தேவனுடைய ஆவி அவனில் இருக்க, கர்த்தராகிய இயேசுவானவர் செய்வதாகக் கூறினதை அவர் செய்ய அவன் காணும்போது, அது அவனுடைய இருதயத்தை அத்தகைய ஒரு வழியில் சிலிர்ப்பூட்டும். எனவே அவனால் அப்பொழுது ஒருபோதும் அமைதியாயிருக்க முடியாததுபோன்றே இது எனக்கு காணப்படுகிறது. அப்பொழுது அவன் அந்த செய்தியைக் கொண்டு தேசத்தையே அனல் மூட்டச் செய்வான். ஆகையால் அவர், “அந்நாட்களில் இருந்ததுபோலவே அப்படியே இருக்கும்” என்றார். 66 அந்த செய்தியானது புறப்பட்டுச் சென்றபோது, யாரோ ஒருவர் ஏதோ ஒருவிதமான வீணான கட்டுக்கதையை கூறிக் கொண்டிருப்பது போல, அவர்கள் அதை வெறுமனே எள்ளி நகையாடி, அதை பரியாசம் பண்ணினர். ஆனால் அதுவோ இரக்கமாயிருந்தது, அது கிருபையாயிருந்தது. அது விடுதலையாயிருந்தது. ஓ, என்னே! 67 தூதன் அந்த செய்தியை அளித்த பிறகு, அவன் அந்த காலை லோத்துவினிடம் கூறினான்: அதாவது அவர், “திவிரமாய் அங்கே ஓடி தப்பித்துக்கொள், நீ அங்கே போய் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது” என்றார். இப்பொழுது நீங்கள் இதை கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் நாம் ஜெபவரிசையின் நிமித்தமாக சீக்கிரமாக முடிக்க வேண்டியதாயிருக்கிறது. தூதன் கூறினதை நீங்கள் கவனித்தீர்களா? “நீ அங்கே போய் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது”. அது என்னவாயிருந்தது? அது ஒரு விடுதலையின் செய்தியாயிருந்தது. வானத்திலிருந்து ஒரு துளி அக்கினி விழுவதற்கு முன்னதாகவே லோத்து சோதோமை விட்டு வெளியேற வேண்டியதாயிருந்தது. 68 வானத்திலிருந்து ஒருதுளி மழை விழுவதற்கு முன்னதாகவே நோவா பேழைக்குள்ளாகச் சென்றான். 69 அணுகுண்டு இந்த தேசத்தை தாக்குவதற்கு முன்பே சபையானது கர்த்தராகிய இயேசுவை சந்திக்கும்படி எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லும். நிலவைச் சுற்றும் செயற்கை கோள்களும், ஏவுகணைகளும் பொருத்தப்பட்டு, வெடிக்கச் செய்யும் பொறியமைவு இழுக்கப்பட, தூதர்கள் யாவரும் அதை வெடிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நின்று கொண்டிருக்கிறார்கள். அல்லேலூயா! பரலோகத்தின் மகத்தான நடைபாதைகள் முழுமையாக நிரம்பியிருக்கின்றன. சுரமண்டலங்கள் சரியான சுதியில் இருக்கின்றன. இசைக்கருவிகளை இசைக்கும் கூட்டம் ஏற்கனவே பயிற்றுவிக்கப்படுகின்றன. அவருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிற ஜீவனுள்ள தேவனுடைய சபையானது வீட்டிற்குத் திரும்பும் நேரம் மிகவும் சமீபமாயுள்ளது. ஒவ்வொரு காரியமும் ஒழுங்கில் உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் மிகவும் களைப்படைந்து கொண்டிருக்கிறேன். ஓ, அது மகத்தான நேரமாயிற்றே. 70 அதாவது இந்த இணைப்பின் நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்கும்படியான ஒரு பாகமாயிருந்து வருகிறோம். நினைவிருக்கட்டும், “அது மனுஷகுமாரனுடைய வருகையிலும் மனுஷகுமாரன் வானத்திலிருந்து வெளிப்படுகின்றபோதும் அவ்வண்ணமாயிருக்கும்”. இப்பொழுது மழை பெய்வதற்கு முன்பே நோவா பேழையில் இருந்தான். 71 அக்கினி விழுவதற்கு முன்பே லோத்து சோதோமிற்கு வெளியே இருந்தான். ஏனென்றால் தூதன், “நீ அங்கே போய் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது. நான் வானத்திலிருந்து இழுத்து அக்கினியை விழப்பண்ணும்படியாக என்னுடைய கரத்தில் நெம்புகோலை வைத்திருக்கிறேன்” என்றான். 72 அது சரியானது என்றே நான் கருதுகிறேன். சபைகள் ஒன்று சேர்ந்து மகத்தான கிறிஸ்துவின் ஒரே சரீரமாய் ஆகுமட்டாக சங்காரத் தூதனானவன் அணுகுண்டுகளோடு ருஷியாவின் கரத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறான். “நீ அங்கே போய் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது”. ஓ, அது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியாயிருக்கிறதல்லவா! 73 நாம் ஒவ்வொரு காரியமும் ஒழுங்கில் அமைந்திருப்பதைக் காண்போமேயானால், அப்பொழுது சபை வீட்டிற்குச் செல்லும் நிலையிலேயே உள்ளதை அறிந்து கொள்ளலாம். இங்கே அதே தேவனுடைய தூதனானவர் அதே அடையாளங்களையும், அதே அற்புதங்களையும் ஒவ்வொரு காரியத்திலும் ஒழுங்கில் அமைத்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்நாட்களில் ஒன்றில் இந்த காரியங்கள் சம்பவிக்கும் என்று கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பிரான்ஹாம் கூடாரமே, நான் இதே பிரசங்க பீடத்திலிருந்து உங்களிடம் கூறினேன். இதோ அது சம்பவித்துக் கொண்டிருக்கிறது. நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். இணைப்பு இங்கே உள்ளது. இது சபையானது வீட்டிற்குச் செல்லும் நெருக்கமான நேரமாக இருக்கிறது. 74 குறை காண்பவர்களும், ஏளனஞ்செய்வோரும், பரியாசம் செய்வோரும், இழித்துரைப்போரும், நெபுகாத்நேச்சார் இராஜாவோடும் பெல்ஷாத்சாரோடும் இருந்த வண்னமாகவே இருக்கின்றனர். அவர்கள் நோவாவின் நாட்களிலும் அவ்வண்ணமாகவேயிருந்தனர். லோத்தின் நாட்களிலும் அது அவ்வண்ணமேயிருந்தது. எனவே அவர்கள் இன்றைக்கும் அதே காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். “நீ அங்கே போய் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது.” 75 லோத்து அவனை நிர்மூலமாக்கவிருந்த ஏதோ காரியத்திலிருந்து வெளியே வந்ததையும், நோவா அவனை இரட்சிக்கவிருந்த ஏதோ ஒன்றிற்குள் சென்றதையும் நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அது சபைக்கு ஒரு மாதிரியாயிருக்கிறது. நாம் உலகத்திலிருந்து வெளியே வந்து, நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற காலத்தில் உள்ள இந்த எல்விஸ் பிரஸ்லி மற்றும் ஆர்தர் காட்ஃபிரே போன்றவர்களிடத்திலிருந்து விலகியிருக்கிறோம். உலகத்திலிருந்து வெளியே வந்து, கிறிஸ்துவுக்குள்ளாகச் செல்லுங்கள். உலகத்தை விட்டு வெளியே வாருங்கள். “அவர்கள் உலகத்தாராயிருக்கிறபடியால் உலகத்தோடு அழிந்துபோவார்கள்”. கிறிஸ்துவுக்குள்ளிருக்கிறவர்கள் கிறிஸ்துவோடு பரம வீட்டிற்குச் சென்று விடுவார்கள். “கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களை தேவன் வருகிறபோது அவரோடே கொண்டு வருவார்”. நாம் பாதுகாப்பிற்காக கிறிஸ்துவுக்குள் செல்லும்படியாக உலகத்திலிருந்து வெளியே வருகிறோம். ஓ! 76 “ஆனால் நீ அங்கே போய் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது” நான் அதனை விரும்புகிறேன். “தீவிரமாகுங்கள்! தப்பித்துக்கொள்ளுங்கள்!” செய்தியோ அவசரமானதாயிருந்தது. “துரிதமாகுங்கள்! துரிதமாகுங்கள்! தப்பித்துக்கொள்ளுங்கள்!” 77 கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! இந்த சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் என்று இயேசு வாக்களித்தார். இது இப்பொழுது அநேக வருடங்களாக பிரசங்கிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. இது இங்கே கடைசி நேரத்திற்கான மகத்தான கடைசி அடையாளமாய் இருக்கிறது. தூதர்கள், “தீவிரம்” என்று சத்தமிடும் சற்று முன்னர் அவர் திரும்பி, “சாராள் நகைத்தாள்?” என்றார். சங்காரத்தூதனானவர், “நான் அவர்களுடைய பாவங்களைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே அது உண்மைதானா அல்லது இல்லையா என்று காணும்படியாக நான் இறங்கி வந்துள்ளேன்” என்றார். அது உண்மையாயிருந்ததை அவர் கண்டார். செய்தியோ கிருபையும், இரக்கமும், விடுதலையுமாயிருந்தது. ஆனால், “தீவிரம், தீவிரம்” என்பதாயிருந்தது. 78 ஓ, பிள்ளைகளே, தயங்கி திகைத்துக் கொண்டிருக்க வேண்டாம். துரிதமாகுங்கள்! துரிதப்படுங்கள்! சீக்கிரம்! நேரம் சமீபமாயிருக்கிறது. ஓடுங்கள். (எங்கே?) சிறு பறவைகள் வெளியே ஓடினது போன்று, இந்த நவீன பண்டைய பாபிலோனின் மதிற்சுவர்களிலிருந்து விலகியோடுங்கள், இந்த பண்டைய பெரிய ஸ்தாபனங்களோ, “இந்நேரத்தில் எந்த வித்தியாசமும் இல்லையே” என்றே கூறுகின்றன. இந்த பெரிதான பண்டைய அவிசுவாச சபைகளோ, “தெய்வீக சுகமளித்தல் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. அற்புதங்களே கிடையாது” என்றே கூறுகின்றன. இந்த மதிசுவர்களிலிருந்து விலகியோடுங்கள். ஏனென்றால் அவைகள் நொறுங்கி தூளாகப் போகின்றன. அவைகள் அழிவுக்குள்ளாகவும், வீழ்ச்சிக்குள்ளாகவும் சென்று கொண்டிருக்கின்றன. ஏனென்றால் என்னுடைய தேவன் அவ்வண்ணம் கூறினார். 79 அதோ அப்பாலுள்ள கல்வாரிக்கு மத்தியிலே ஒடுங்கள். பறவைகள் மரங்களுக்கு சென்றதானால், நீங்களும் கூட மரத்தண்டை செல்லுங்கள், கிறிஸ்துவானவர் அறையப்பட்ட அந்த மரத்தண்டைக்கே செல்லுங்கள். அவருடைய இரக்கத்திற்கு மத்தியிலே தொங்கி, புயலானது கடந்து போகின்றவரையிலும் தேவனண்டை கதறுங்கள். 80 துரிதமாகுங்கள், தப்பித்துக் கொள்ளுங்கள்! இங்கு வந்து சேருங்கள், ஏனென்றால் நீங்கள் வெளியே செல்லும் வரை நான் ஒன்றும் செய்யக்கூடாது. அவர் உங்கள் பேரில் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நவநாகரிக காரியங்களிலிருந்து விலகியிருங்கள். வேறு விதமான திரைப்படங்கள் தொலைக்காட்சியில் தோன்றும்போது அதிலிருந்து விலகியிருங்கள். வானொலியில் இந்த ராக் அண்ட் ரோல் இசையானது ஒலிபரப்ப துவங்கும்போது அதனை நிறுத்திவிடுங்கள். ஒரு பெண்மணியைப்போல் நடந்து கொள்ளுங்கள். ஒரு பெண்மணியைப் போன்று உடை உடுத்துங்கள். ஒரு புருஷனைப் போல் நடந்து கொள்ளுங்கள். ஒரு புருஷனைப்போல உடை உடுத்துங்கள். ஒரு கிறிஸ்தவனைப் போல பேசுங்கள். ஒரு கிறிஸ்தவனைப்போல ஜீவியம் செய்யுங்கள். எல்லாத் தொடர் பிணைப்புகளையும் அழித்து விடுங்கள். துரிதமாக செயல்படுங்கள்! வெளியே வாருங்கள்! அழிவு சமீபமாயிருக்கிறது. தேவன் பிணியுற்றவராய், களைப்புற்றவராய் இருக்கிறார். 81 ஓ, இது நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாயுள்ளது. வேளையானது சமீபமாயிருக்கிறது. தூதனுடைய இரக்கமானது, இரக்கத்தின் தூதன் அனுப்பின அவருடைய செய்தியானது இன்றிரவு இங்கேயிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] உபத்திரவ காலத்திற்கு முன்னர் சபையானது செல்ல வேண்டியதாயிருக்கிறதா? [“ஆமென்”.] 82 பாருங்கள், இஸ்ரவேலர் கோசேனுக்குள் சென்றனர், எகிப்தியரோ இருளுக்குள்ளாகச் சென்றனர். இஸ்ரவேலர் கோசேனுக்குள்ளாகச் சென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள்ளாக கொண்டு செல்லப்பட்டனர். எகிப்தியரோ இருளுக்குள்ளாகச் சென்று, சவக்கடலில் புதைக்கப்பட்டனர். 83 துரிதமாக செயல்படுங்கள்! துரிதமாக செயல்படுங்கள்! தப்பித்துக் கொள்ளுங்கள்! இதுவே உங்களுடைய கடைசித் தருணமாயிருக்கலாம். நினைவிருக்கட்டும், நாம் ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். நாம் அவைகளைக் குறித்து கேள்விப்படுகிறோம். நாம் அதனை செய்தித்தாளில் பார்க்கிறோம். முழு உலகமே ஒரு நடுக்கத்தில் இருக்கிறது. தேவன் கூறின ஒவ்வொரு காரியமும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. 84 ஆகையால் அதைக் குறித்து என்ன? “மனுஷகுமாரன் வானத்திலிருந்து வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்”. மனுஷகுமாரன் என்னவாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கறார்? நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாகவே. 21வது வசனத்தில் இல்லை, 30வது வசனத்தில் அது உள்ளதைப் பாருங்கள். மனுஷகுமாரன் வானத்திலிருந்து வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். 85 அது என்னவாக இருக்கிறது? இந்த செய்தியானது அதை…இயேசுவானவர் பூமியின் மீது இருந்தது முதற்கொண்டே இந்த காரியமானது ஒருபோதும் சம்பவித்திருக்கவேயில்லை. இதோ புறஜாதியாரின் கால முடிவில் அது உள்ளது. நாம் அப்படியே ஒரு வினாடி அதை நோக்கிப்பார்த்து ஆழ்ந்து சிந்திப்போமாக. 86 இயேசுவானவர் பூமியின் மேலிருந்தபோது, அவர் ஒரு சுகமளிப்பவராக உரிமை கோரவில்லை. அவர், “கிரியைகளை செய்கிறது நானல்ல; அது என் பிதாவாயிருக்கிறது. ஆனால் பிதாவானவர் எனக்கு செய்யும்படிக் காண்பிக்கிறது எதுவோ அதை மட்டுமே நான் செய்கிறேன்” என்றார். பரிசுத்த யோவான் 5:19ல் அவர், “பிதாவானவர் செய்ய குமாரன் காண்கிறதெதுவோ அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய் செய்யமாட்டார்” என்றார். 87 நீங்கள் பிலிப்புவை கவனிப்பீர்களேயானால், அவன் முதலில் மனமாற்றமடைந்தான். இல்லை…கர்த்தராகிய இயேசு, தம்முடைய ஊழியத்தைத் துவக்கினபோது என்ன சம்பவித்தது? 88 மனுஷகுமாரன் எப்படி தம்மை வெளிப்படுத்தப் போகிறார் என்பதை நாம் பார்ப்போம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரேயானால், அவர் நேற்று தம்மை வெளிப்படுத்தினதைப் போலவே வெளிப்படுத்தப்பட வேண்டியவராயிருப்பார். அவர் அதே விதமாக வெளிப்படுத்துவாரானால், அவர் அதே செய்தியையும் வெளிப்படுத்த வேண்டியவராயிருப்பார். அமைதியாயிருந்து கவனியுங்கள். 89 பரிசுத்த யோவான் 1-ல், பேதுரு அவருடைய ஊழியத்தைப் பின்தொடர்ந்து அவரண்டை வந்தான். பேதுரு அவரண்டை நடந்து சென்றான். அப்பொழுது அவன் பேதுரு என்று அழைக்கப்படாதிருந்தான். அவன் வேறொரு பெயரினால் அழைக்கப்பட்டிருந்தான். அவன் அவரண்டை நடந்து சென்றபோது, அவர், “நீ சீமோன், உன்னுடைய தகப்பனார் யோனா” என்றார். அப்பொழுது அந்த வயோதிக செம்படவன், “அவர் என்னை எப்படி அறிந்து கொண்டார்?” என்பதை எண்ணிப் பார்த்தான். 90 அப்பொழுது பெத்சாயிதாவிலிருந்து வந்த பிலிப்பும் கூட மலையைச் சுற்றிவந்தபோது, அவன் மரத்தின் கீழ் ஜெபித்துக் கொண்டிருந்த நாத்தான்வேல் என்ற ஒரு சிநேகிதனைக் கண்டான். அப்பொழுது அவன், “நாங்கள் கண்ட யோசேப்பின் குமாரனாகிய நசரேயனாகிய இயேசுவை வந்துபார்” என்றான். இப்பொழுது அவர் தம்மை எப்படி வெளிப்படுத்தினார் என்பதைக் கவனியுங்கள். 91 அதற்கு இவன், “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” என்று கேட்டான். 92 அப்பொழுது அவன், “வந்துபார்” என்றான். அதுவே எந்த மனிதனும் மற்றொருவனுக்கு கூறக்கூடிய சிறந்த பதிலாகும். அதை குறை கூறாதீர்கள். வந்து உங்களுக்காக கண்டறிந்து கொள்ளுங்கள். ஓ, இன்றைக்கு நாம் மட்டும் அந்தவிதமான உத்தமமாய் இருக்கக்கூடுமானால் நலமாயிருக்கும். 93 அப்பொழுது அவன் செல்லும் பாதையில் இவனுக்குக் கற்பிக்கத் துவங்கினான். ஏன்? அவன், “பேதுருவை, நேற்றைய தினம் ஒரு மனிதன்…கேபாவை, அந்த வயோதிக செம்படவனை உனக்குத்தெரியுமா?” என்று கேட்டான். “ஆம், தெரியுமே”. 94 “அவன் இந்த மனிதன் முன்பாக நடந்து சென்றபோது, அவன் யார் என்றும், அவனுடைய தந்தை யார் என்பதையும் அவர் அவனிடம் கூறினார்”. “ஹா” அப்பொழுது அவன், “நாத்தான்வேலே அதைக் குறித்து எனக்குத் தெரியாது” என்றான். 95 அவன் இயேசுவானவர் இருந்த இடத்திற்கு நடந்து சென்ற போது, அவர் வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருந்த வரிசைக்குள்ளாக இவன் சென்றபோது, இயேசுவின் அந்தக் கண்கள் அவனை ஊடுருவியது. அப்பொழுது அவர், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். 96 அவன் இஸ்ரவேலன் என்பதை அவர் எப்படி அறிந்தார்? கிரேக்கர்களும், மற்ற யாவரும் காண்பதற்கு ஒரே விதமாக உடை உடுத்தியிருந்தனரே. அவன் ஒரு இஸ்ரவேலனாய் இருந்தான் என்பதை அவர் எப்படி அறிந்து கொண்டார். அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாயிருந்தார். அவர் என்ன செய்தார்? அவர் நோக்கிப் பார்த்தபோது, அவனைக் கண்டார். அதற்கு அவன், “ரபீ, நீர் என்னை எப்படி அறிந்தீர்?” என்று கேட்டான். 97 அப்பொழுது அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னமே நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்” என்றார். 98 அவனோ, “அது இதனை தீர்த்து வைக்கிறதே! நீர் தேவனுடைய குமாரன். நீர் இஸ்ரவேலின் ராஜா” என்றான். 99 அதற்கு இயேசு, “நான் உனக்கு இதை கூறினபடியால் நீ இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டு, “இதிலும் பெரியதானவைகளைக் காண்பாய்” என்றார். 100 ஆனால் அவிசுவாசியான சபை அங்கத்தினர்கள் அருகில் நின்றிருந்தனர். ஓ, அவர்களால் இருக்க முடிந்தளவு பக்தியாயும், உறுதியாயுமிருந்தனர். நிச்சயமாகவே, அவர்கள் அங்கே பெரியதான கல்வியறிவோடும், மகத்தான வேத சாஸ்திரி பள்ளி அனுபவங்களோடும் நின்றுகொண்டிருந்தனர். எனவே அவர்கள், “இந்த மனிதன், ஒரு குறிசொல்லுபவன் இவன் பெயல்செபூல்” என்றனர். 101 இயேசு, “நீங்கள் எனக்கு கூறும் அதை நான் உங்களுக்கு மன்னிப்பேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரும்போது அதே காரியத்தைச் செய்வார். அப்பொழுது அதற்கு விரோதமான ஒரு வார்த்தையும் இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படவே மாட்டாது” என்றார். 102 அங்கே பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ இருந்தாள். அவள் கூட்டத்தினூடாக வந்து அவருடைய வஸ்திரத்தை தொட்டாள். ஏனென்றால் அவள் தனக்குள்ளாகவே, “நான் அந்த மனிதரைத் தொடக்கூடுமானால், அப்பொழுது நான் சுகமடைவேன்” என்று சொல்லிக்கொண்டாள். எனவே அவள் அவரைத் தொட்டாள். பின்னர் அவள் கூட்டத்திலிருந்து ஓடி அமர்ந்து கொண்டாள். அல்லது அவள் ஏதோ ஒன்றை செய்தாள். அப்பொழுது இயேசு சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்து, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். 103 அப்பொழுது பேதுரு அவரைக் கடிந்து கொண்டான், மேலும் அவன், “பாருங்கள், முழு கூட்டமும் உம்மை தொட்டுக் கொண்டிருக்கிறதே, ‘என்னைத் தொட்டது யார் என்று ஏன் நீர் கேட்கிறீர்?’ என்று கேட்டான். 104 அதற்கு அவர், “நான் பெலவீனமடைந்துள்ளேன், வல்லமை, இல்லை பெலன் என்னிடத்திலிருந்து புறப்பட்டுப் போயிற்று” என்றார். அவர் அவளை கண்டுபிடிக்கும்வரை அவர் அந்தக் கண்களினால் சுற்றும் முற்றும் நோக்கிப் பார்த்தார். அவர் அதை எப்படிச் செய்தார்? நாம் அதை அறியோம். ஆனால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் அந்தப் பாணியிலேயே யூத தேசத்திற்கு தம்மை வெளிப்படுத்தினார். 105 அவர் சாமாரியர்கள் அண்டையில் வந்தபோது, ஒரு அழகான சாமாரிய ஸ்திரீ கிணற்றண்டையில் இருந்தாள். 106 மூன்று தேச மக்கள் மட்டுமே உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது யூதர், புறஜாதியார், சமாரியர் ஆவர். காம், சேம், யாப்பேத்தினுடைய ஜனங்களே. சமாரியரோ பாதி யூதரும், பாதி புறஜாதியுமாயிருந்தனர். யூதர்கள் புறஜாதிகளுடைய ஸ்திரீகளை விவாகம் செய்துகொண்டபோது அது துவங்கினது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். 107 இந்த வாலிப ஸ்திரீ அங்கே வந்தாள். நாம் நம்முடைய தேசத்தில் ஒரு துர்கீர்த்தியுள்ள ஸ்திரீ என்று நினைப்பது போன்ற ஒருவள். ஆனால் அவள் அவ்வாறிருக்கவில்லை. இந்தியாவிலிருந்து வந்துள்ள இந்தப் பையனால் அதை உங்களுக்கு கூற முடியும். இது ஒரு கிழக்கத்திய புத்தமாகும். ஆனால் நீங்கள் அதை ஒரு மேற்கத்திய கல்வியைக் கொண்டே படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். 108 நான் இந்தியாவிற்கு சென்றபோது, பம்பாயில் விமானத்தை விட்டு இறங்கியபோது, அங்கே மெத்தோடிஸ்டு சபையின் பேராயரும் மற்ற யாவரும் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர், “திரு.பிரான்ஹாம் அவர்களே, நீர் ஒரு ஊழியக்காரன் (Missionary) என்று எங்களிடம் கூறாதீர். அமெரிக்க மக்களாகிய நீங்கள் வேதத்தை அறிந்துள்ளதைக் காட்டிலும் நாங்கள் அதிகமாக அறிந்துள்ளோம்” என்றார். அது உண்மையே. மேலும் அவர், “நீங்கள் ஒரு தேசமாவதற்கு முன்பே நாங்கள் வேதாகமத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாக உடையவர்களாக இருக்கிறோம்” என்றும் கூறினார். அது உண்மை. பரிசுத்த தோமாவின் சபை இன்னமும் அங்கே இருக்கிறது. பரிசுத்த தோமா அங்கே சென்று பிரசங்கித்தார். மேலும் அவர், “ஆனால் இந்த வேதாகமத்தை மீண்டும் ஜீவிக்கச்செய்யும்படியாக தேவன் உங்களை சந்தித்திருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம்” என்றார். மீண்டும் அவர் தொடர்ந்து, “அதைத்தான் நாங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம்” என்றும் கூறினார். அதுதான் இது. உலகமோ ஜீவ அப்பத்திற்காக பசியாயிருக்கிறது. 109 இந்த சமாரிய ஸ்திரீ, அவள் கிணற்றண்டை நின்றபோது, இயேசு அவளிடத்தில், “ஸ்திரீயே எனக்கு தண்ணீர் கொண்டு வா” என்றார். 110 நல்லது, அவர்களிடம் இருந்த பிரிவினையை அவள் கூறினாள். ஆனாலும் வேறுபாடே கிடையாது என்பதை அவர் அவள் அறிந்து கொள்ளும்படி செய்தார். தேவன் எல்லா ஜனங்களையும் ஒரே இரத்தத்தினால் உண்டுபண்ணினார். 111 அப்பொழுது அவர், “உன்னிடத்தில், பேசிக்கொண்டிருந்தது யார் என்பதை நீ அறிந்திருப்பாயானால், அப்பொழுது நீயே அவரிடத்தில் தாகத்துக்குதா என்று கேட்டிருப்பாய்” என்றார். 112 அவர் அவளுடைய ஆவியை அறிந்துகொள்ளும்வரை உரையாடல் நிகழ்ந்தது. பின்னர் அவர் அவளுடைய தொல்லை என்னவென்பதை அறிந்துகொண்டார். அப்பொழுது அவர், “போய் உன்னுடைய புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். 113 அது, யூதரிடத்தில் கூறப்பட்டபோது என்ன சம்பவித்தது? யூதர்களோ, “நீர் தேவனுடைய குமாரன்” என்றனர். அது சரியே. 114 அவளிடத்தில், “போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா” என்று கூறப்பட்டபோது, சமாரியர்களிடத்தில் என்ன சம்பவித்தது? 115 அப்பொழுது அவள், “நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். இப்பொழுது கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று நாங்கள் அறிவோம். அவர் வருகிறபோது அவர் இந்த காரியங்களை எங்களுக்கு அறிவிப்பார். ஆனால் நீர் யார்?” என்று கேட்டாள். அதற்கு இயேசு, “உன்னுடன் பேசுகிற நானே அவர்,” என்றார். 116 அப்பொழுது அந்த ஸ்திரீ ஊருக்குள்ளே ஓடி, “நான் செய்திருக்கிற காரியங்களை எனக்கு சொன்ன ஒரு மனிதனை வந்து பாருங்கள், இது மேசியாதானா?” என்றாள். 117 அவர் அதைப்போன்று ஒரு முறை கூட ஒரு புறஜாதியாரிடத்திலும் செய்யவேயில்லை. ஏன்? இந்நாள்வரை அவர் அதை விட்டுவிட்டார். அதனால்தான் அவர் இங்கே “மனுஷகுமாரன் தம்மை இந்நாட்களில் வானத்திலிருந்து வெளிப்படுத்துவார்” என்றார். அவர் இரக்கத்திற்காக இப்பொழுது தம்மை சபைக்கு வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். அடுத்த முறை அவர் தம்மை செய்தியை புறக்கணிக்கிறவர்களுக்கு அழிவில் வெளிப்படுத்துவார். 118 தேவனே எங்களிடத்தில் இரக்கமாயிரும். நாம் அப்படியே ஒரு நிமிடம் ஜெபம் செய்வோம். சகோதரி கெர்ட்டி, (Gerti) நீங்கள் மென்மையான, மென்கனிவான என்ற பாடலுக்கு சுருதி கொடுப்பீர்களேயானால் நலமாயிருக்கும். 119 இன்றிரவு நான் சற்று எண்ணிப்பார்க்கிறேன். ஆனாலும் சுவரைச் சுற்றிலும் நின்று கொண்டிருக்கிற உங்கள் யாவருக்காகவும் வருந்துகிறேன். உங்களுடைய எதிர்ப்பார்ப்புகளை என்னால் உணரமுடிகிறது. ஓ, நான் சற்று எதிர்பார்க்கிறேன். நீங்களாகவே சற்று நேரம் தேவனோடு உண்மையாயிருப்பீர்களானால் நலமாயிருக்கும். 120 நீங்கள் உண்மையாகவே இதிலிருந்து துரிதமாக வெளியேற விரும்புகிறீர்களா? கர்த்தராகிய இயேசு என்றழைக்கப்படுகின்ற ஒரு மனிதனின் பிரசன்னத்தில் இன்றிரவு இருக்கின்றீர்கள். அவர் உங்களுக்கான அனுமதி சீட்டை வைத்திருக்கிறார். நீங்கள் அவருக்கு வெறுமனே கொடுக்க வேண்டியிருப்பதெல்லாம் உங்களுடைய இருதயத்தையேயாகும். அவர் அதை தம்முடைய சொந்த இரத்தத்தில் கழுவி, எல்லா பாவங்களிலிருந்தும், எல்லா சந்தேகங்களிலிருந்தும் உங்களை சுத்திகரித்து, அவர் வருகிறபோது உங்களை தம்முடைய பரத்திற்கு கொண்டு செல்வார். 121 அந்த செயற்கைக்கோள்கள் காலைக்கு முன்னரே வரக்கூடும். விஞ்ஞானம் கூறுகிறதுபோல ஒரு காரியமும்…இல்லை. நீங்கள் அதனை ஒவ்வொரு நாளும் வானொலியில் கேட்கின்றீர்கள். அவர்கள் அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகின்றபோதும், அவர்கள் விஞ்ஞான சம்மந்தமாக நேர்முகப்பேட்டி கண்டு கொண்டிருக்கிறபோதும் அதைக் குறித்து கேள்விப்படுகின்றீர்கள். அவர்களோ, “எந்த நிமிடத்திலும் இந்த உலகமும் வெடித்துச் சிதறுவதிலிருந்து தடை செய்ய ஒரு காரியமும் கிடையாது” என்கின்றனர். நன்றாக வெறித்துக் குடித்த ஒருவன் ஒரு நெம்புகோலை இழுத்தால் அதுவே இதனை தீர்த்துவிடும். 122 விரைந்து செல்லுங்கள்! செய்தியோ மிகவும் அவசரமானதாக இருக்கிறது. தப்பித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஜீவனுக்காக ஓடுங்கள். அதிலிருந்து வெளியே வாருங்கள். இந்த நவீன பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள். மதிற்சுவர்களிலிருந்து தூரமாய் விலகியோடுங்கள். உங்களுடைய இருதயத்திலிருந்து ஏதோ காரியம் வலிந்திழுப்பதை உங்களால் உணரமுடியவில்லையா? நீங்கள் உண்மையாகவே ஆவிக்குரியவர்களாக இருப்பீர்களாயின், தேவன் உங்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறாரே! அவர் அந்த சிறிய பறவைகளிடத்தில் பேசினாரென்றால், நிச்சயமாகவே அவரால் உங்களிடத்திலும் பேசமுடியும். 123 உங்களுடைய கரத்தை அவரண்டை நீங்கள் உயர்த்துவீர்களா? பீடத்தைச் சுற்றி ஜனங்களை நிறுத்தும்படிக்கு நாம் போதிய இடத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் நீங்கள் உங்களுடைய கரத்தை சற்று உயர்த்தி, “தேவனே என்னிடம் இரக்கமாயிரும்” என்று கூறுவீர்களேயானால் நலமாயிருக்கும். சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஓ, என்னே! கட்டிடம் முழுவதுமே கரங்களை உயர்த்தியுள்ளனர். அங்கே எத்தனை கரங்கள் உள்ளன என்பதை நான் அறியேன். “ஓ, தேவனே, என்னிடம் இரக்கமாயிரும். இது என்னுடைய கரமாயிருக்கிறது. கர்த்தாவே நான் தப்பித்துக்கொள்ள விரும்புகிறேன். காலைக்கு முன்னரே நான் ஒரு அலறல் சத்தத்தைக் கேட்கலாம். அப்பொழுது நான் வெளியே நோக்கிப் பார்க்கும்பொழுது வானவில் ஆகாயத்தினூடாக மிதப்பதுபோல தோற்றமளிக்க, மனுஷகுமாரன் வருவார்”. 124 என்னே ஒரு பயங்கரமான நாள்! அதாவது நீங்கள் உங்களுடைய தருணத்தை தவறவிட்டு விட்டீர்கள். நீங்கள் உங்கள் சபையையே சுற்றி நின்றிருந்தீர்கள். நீங்கள் அவ்வாறு நிற்கவில்லையா? “ஓ,” நீங்களோ, “அம்மா இதைச் சேர்ந்தவளாயிருந்தாளே” என்றீர்கள். சகோதரனே அது சரிதான். சகோதரியே அது சரிதான். ஆனால் தாயினுடைய இரட்சிப்பு உங்களை ஒருபோதும் உள்ளே கொண்டு செல்லாதே. தாயார் ஓர் நாளில் ஜீவித்தார். நீங்களோ மற்றொரு நாளில் ஜீவிக்கின்றீர்களே. 125 கர்த்தருடைய செய்தியைக் கேளுங்கள். ஆவியானவரின் எச்சரிப்பைக் கேளுங்கள். ஒரு கூடாரத்தின் உட்புறத்திலே சாராள் எவ்வாறு நகைத்துக் கொண்டிருந்தாள் என்பதை பகுத்தறிந்த அந்த ஆவி எந்த வகையான ஆவியாயிருந்தது? கர்த்தருடைய தூதனே. 126 இப்பொழுது உங்களுடைய தலைகள் வணங்கியிருப்பதோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்க விரும்புகிறேன். 127 நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தினபோது நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் அது ஏதாவது காரியத்தை பொருட்படுத்தியிருக்குமா?” என்கிறீர்கள். நிச்சயமாகவே பொருட்படுத்தியிருந்தது. நீங்கள் அதை உண்மையாகவே குறிப்பிட்டுக் கூறியிருப்பீர்களேயானால், அது மரணத்திற்கும், ஜீவனுக்குமிடையேயுள்ள வித்தியாசத்தை சுட்டிகாட்டியிருக்கும். செய்தியோ மிகவும் அவசரமானதாயிருக்கிறது. இப்பொழுதே உங்களுடைய கரத்தை நீங்கள் உயர்த்தமாட்டீர்களா? “தேவனே என்னிடத்தில் இரக்கமாயிரும்”. 128 தேவன் இந்த சிறுபெண்ணை ஆசீர்வதிப்பாராக. தேவன் இந்த பெண்மணியை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை, இந்த சிறு புதல்வனை, உங்களை, உங்களையும், இந்த வாலிபனையும் ஆசீர்வதிப்பாராக. சிறுபிள்ளைகள் யாவரும் இந்த பீடத்தண்டையிலே தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கின்றனர். நல்லது, அவர்களுடைய சிறிய இருதயங்களையும் ஆசீர்வதியும். நீங்களோ, “அவர்கள் அதைக் குறிப்பிட்டுக் கூறவில்லை” எனலாம். ஓ, ஆம், அவர்கள் அதைத்தான் குறிப்பிட்டு கூறுகிறார்கள். 129 இயேசு, “சிறுபிள்ளைகளை என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்றார். அவர்கள் ஒரு போதும் பருவமடையும்படிக்கு ஜீவிக்காமல் போகலாம். ஆனாலும் அவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தில் இருப்பார்கள். அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். ஒருக்கால் ஒருபோதும்…நாம் பெரியதான காரியங்களினூடாக செல்ல வேண்டியதாயிருக்கிறது. 130 “தேவனே, இரக்கமாயிருப்பீராக!” நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துகிறபோது, உங்களுக்குள் இருக்கிற ஏதோ ஒரு காரியமே ஒரு தீர்மானத்தை செய்திருக்கிறது என்பதை அது காட்டுகிறது. உங்களுக்குள் ஏதோ காரியம் இல்லாதிருக்குமானால் உங்களுடைய சரீரம் மரித்துப்போயிருக்கும். எனவே அதுவே, “உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள்” என்று கூறினது. அது ஆவியானவராயிருந்தது. ஆகையால் நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துகிறீர்கள். தேவன் அதற்கு சாட்சி பகர்ந்தார். ஆவியானவரே உங்களை உங்களுடைய கரத்தை உயர்த்தச் செய்தார். 131 அங்கே பின்னால் இருக்கின்ற சிறு பிள்ளைகளாகிய உங்கள் யாவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. அங்கே உள்ள அந்த கறுப்புநிற பிள்ளைகளையும் கூட தேவன் ஆசீர்வதிப்பாராக. தேனே, தேவன் உங்களுடைய சிறிய இருதயங்களையும் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை நேசிக்கிறார். நிச்சயமாகவே. 132 இந்நாட்களில் ஒன்றில் நாம் இங்கிருந்து போகப்போகிறோம். அது எப்பொழுது இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது வந்து கொண்டிருக்கிறது. துரிதமாக, உடனடியாக இராஜ்ஜியத்திற்குள் பிரவேசியுங்கள். நீங்களோ, “நல்லது, நான் அதற்கு முன்பே கேட்டிருக்கிறேன்” எனலாம். நீங்கள் அதை உங்களுடைய கடைசி நேரத்திலும் கூட கேட்கலாம். அது இந்த நேரமாக இருக்கட்டுமே. அங்கே பின்னாகவுள்ள வாலிப ஸ்திரீயே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 133 இந்த நவீன காரியங்கள் எல்லாவறிலிருந்தும் தப்பி ஓடுங்கள். இந்த பண்டைய மதிற்சுவர்களிலிருந்து தப்பி ஓடுங்கள். அவைகள் யாவும் வீழ்ந்துபோகும். இந்த எல்லா ராக்—அன்ட்—ரோல் நடனங்களும், இந்த மற்ற காரியங்கள் யாவும் உலகத்தோடு அழிந்து போகும். உலகத்தில் உங்களை உள்ளிணைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் அங்கிருந்து வெளியேறுங்கள். தேவன் தம்முடைய சபைக்காகவே வருகிறார். அவர் உங்களை தெரிந்து கொண்டார். அந்த காரணத்தினால்தான் அவர் உங்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். செய்தியோ மிகவும் அவசரமானதாக இருக்கிறது. சீக்கிராமக வாருங்கள். 134 இப்பொழுது நாம் ஜெபிக்கையில், உத்தமமாயிருந்து, தேவன் உங்களிடத்தில் இரக்கமாயிருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள். 135 ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தாவே, இதற்கு முன் தேவனுடைய வல்லமைகளின் கிரியை ஒருபோதும் காணாதிருக்கிற ஜனங்கள் இங்கு இருக்கலாம். ஆனாலும் அவர்கள் இருதயத்தில் உள்ள ஏதோ காரியமே “உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள், அது நானே” என்று உரைத்திருக்கிறது. அது அவசர அழைப்பாய் இருக்கிறது என்பதை அவர்கள் காண்கிறார்கள். அவர்கள் சுற்றும் முற்றும் நோக்கிப் பார்க்கும்படியாகவும், ஏதோ காரியம் சம்பவிக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது என்பதை காணும்படியான போதிய அறிவுத்திறன் வாய்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். 136 சிறுபிள்ளைகள், அவர்களில் அநேகர் தங்களுடைய சிறிய கரங்களை உயர்த்தியுள்ளனர். தேவனே அவரகளண்டை இரக்கமாயிரும். அநேக வயோதிபர்களும், நடுத்தர வயதுடைய அநேகரும் தங்களுடைய கரங்களை உயர்த்தியுள்ளனர். பதின்மூன்று முதல் பத்தொன்பது வயதுடையவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தியுள்ளனர். தேவனே அவர்கள் இரக்கத்தையே வேண்டிக் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்துவின் முதல் வெளிப்பாடே இரக்கமாயிருக்கிறது என்பதை நான் அறிந்துகொள்ள மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இரண்டாம் வெளிப்பாடு நியாயத்தீர்ப்பாயிருக்கிறது. ஓ, தேவனே, இன்றிரவு இரக்கத்தின் பாதையிலே இரக்கத்தைப் பெற்றுக்கொண்டுள்ள இவர்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்”. 137 கர்த்தாவே, இன்றிரவே அவர்களுடைய விளக்குகளைக் கொளுத்தும். அவர்கள் மலையின் மேல் வைக்கப்பட்டுள்ள மறைந்திருக்க்கமாட்டாத விளக்குகளாய் இருந்து, இது முதற்கொண்டு பள்ளிகளுக்கும், அவர்கள் தொடர்பு கொள்ளப்படும் இடங்களுக்கும் வெளிச்சம் கொடுப்பவர்களாக இருப்பார்களாக. அதை அருளும் கர்த்தாவே. அவர்கள் தேவனுடைய மகிமைக்காக பிரகாசிக்கும் விளக்குகளாய் இருப்பார்களாக. அவர்களை ஆசீர்வதியும். 138 என்றோ ஓர்நாளில் கர்த்தாவே, ஒரு மேலான உலகத்தில் நாங்கள் யாவரும் கலியாண விருந்திலே அந்த தேவனுடைய மகத்தான மேஜையை சுற்றி சந்திப்போமாக. கர்த்தாவே உம்முடைய ஆவியை எங்கள் மீது வைத்து காத்துக்கொள்ளும். சுவர்களைச் சுற்றி நின்று கொண்டிருப்பவர்களையும், வெளியே முன் கூடத்தை சுற்றி இருப்பவர்களையும், தங்களுடைய கரங்களை உயர்த்தினவர்களையும் ஆசீர்வதியும். கர்த்தாவே அவர்களோடும் இரும். இன்றிரவு அவர்கள் நெடுநேரமாய் நின்று கொண்டிருக்கிறபடியால் அவர்களுடைய கால்கள் மரத்துப்போயிருக்கின்றன. இரக்கமாயிரும். இந்த காரியங்களை அருளும். 139 அவர்கள் இன்றிரவின் சிறிய அவசரமான செய்தியின் பலன்களாக இருக்கின்றனர். அவர்கள்—அவர்கள் அதில் எதையும் தவறவிடாதபடிக்கு, தேவ தூதர்கள் அதை அவர்களுடைய இருதயங்களுக்கேற்ப, அவ்வளவு தத்ரூபமானதாக்குவார்களாக. அவர்கள் பலன்களாயிருக்கின்றனர். நான் அவர்களை உமக்கு அளிக்கிறேன். நீர் அவர்களை இயேசுவண்டை அருளுவீராக. ஏனென்றால் அவர்கள் அவருக்கான உம்முடைய அன்பின் வெகுமதிகளாய் இருக்கின்றனர். “அவருடைய கரத்திலிருந்து அவர்களை பறித்துக் கொள்ள ஒருவனாலும் கூடாது. ஏனென்றால் தேவனைக் காட்டிலும் பெரியவர் எவருமில்லையே!” எனவே அவர்களுக்காக இயேசுவானவர் வருகின்ற வரையிலும் நீர் அவர்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன். 140 செய்தியானது மிகவும் அவசரமானதாக இருக்கின்றபடியால் கர்த்தாவே மற்றவர்களும் துரிதமாக, துரிதமாகவே ஆயத்தப்படுவார்களாக. நாங்கள் அழிவு உண்டாவதற்கு முன்னமே துரிதமாக வெளியேற வேண்டும். இப்பொழுது தேவனாகிய கர்த்தாவே, நீர் உம்முடைய தூதனை அதாவது ஆபிரகாமோடே அமர்ந்திருந்த அதே ஒருவரை அனுப்பும் என்றே நான் ஜெபிக்கிறேன். அதை அருளும் கர்த்தாவே, அவரால் பின்னாக கூடாரத்தில் இருந்த சாராள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதைக் கூற முடிந்தது. அவர் உடன்படிக்கையின் தூதனாயிருந்தார். அவர் அக்கினி விழுவதற்கு முன்பாக இரக்கத்தைக் கொண்டு வந்த தூதனாயிருந்தார். இப்பொழுது அநேகமாக எந்த நேரத்திலும் அக்கினியானது விழக்கூடுமானால், அணுக்களானது முழு உலகத்தையே இரண்டாக உடைத்து விடும். கர்த்தாவே அவர் இன்றிரவு வந்து எங்களுக்கு இரக்கத்தை அருளுவாராக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 141 ஓ, ஆசீர்வதிப்பட்ட பண்டைய சுவிசேஷத்தைக் குறித்து ஏதோ காரியம் உண்டு. அது உங்களை துடைத்து துப்புரவாக்குவது போல தோன்றுகிறது. நான் அதை விரும்புகிறேன். 142 நாம், “மென்மையாய், மென்கனிவாய் இயேசுவானவர் அழைத்துக் கொண்டிருக்கிறார்” என்ற அந்தப் பாடலை ஒரு முறை சற்று பாடுவோமாக. ஒவ்வொருவரும் நாம் நம்முடைய கரங்களை அவரண்டை அப்படியே உயர்த்துவோமாக. நீங்கள் அதைச் செய்வீர்களா? மென்மையாய், மென்கனிவாய் இயேசு அழைத்துக்கொண்டிருக்கிறார், அவர் உங்களுக்காகவும், எனக்காகவுமே அழைத்துக் கொண்டிருக்கிறார், நாம் பாவம் செய்திருந்தும், அவர் இரக்கத்தையும், மன்னிப்பையும் உடையவராயிருக்கிறாரே! அவர் உங்களுக்காகவும், எனக்காகவும் மன்னிப்பை உடையவராயிருக்கிறாரே. வீட்டிற்கு வாருங்கள், வீட்டிற்கு வாருங்கள் (இப்பொழுது கிறிஸ்துவோடு அப்படியே உள்ளே அடைத்துக் கொள்வோம்) இளைப்படைந்தோரே வீட்டிற்கு வாருங்கள்; அக்கறையாய், மென்கனிவாய் இயேசுவானவர் அழைத்துக் கொண்டிருக்கிறார், ஓ, பாவியே, வீட்டிற்கு வா என அழைக்கிறாரே! 143 [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி] இதற்கு முன்பு எங்களுடைய சுகமளிக்கும் ஆராதனைகளில் ஒருபோதும் இருந்திராதவர்கள் இருந்தால் நாங்கள் உங்களுடைய கரங்களை காணட்டும். ஒருபோதும் ஆராதனைகளில் இருந்திராதவர்களா? அது நல்லது. நீங்கள் இங்கு இருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 144 இப்பொழுது நான் ஒரு சுகமளிப்பவனாயிருக்கும்படி உரிமை கோருகிறதில்லை. ஆனால் இயேசுவானவர் மரித்துவிடவில்லை என்றும், அவர் உயிரோடிருக்கிறார் என்றுமே நான் உரிமை கோருகிறேன். நான் ஒரு சுகமளிப்பவன் அல்ல. சுகமளிப்பவர்களே கிடையாது. கிறிஸ்து ஏற்கனவே உங்களை சுகப்படுத்தியிருக்கிறார். “அவருடைய தழும்புகளால் குணமானோம்.” 145 ஆனால் புதியதாக வருகை தந்திருக்கும் உங்களிடத்தில் ஒரு காரியத்தை நான் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் ஒருவேளை ஒரு சபைக்கு செல்லலாம். உங்களில் அநேகர் உங்களுடைய கரங்களை அப்பொழுது உயர்த்தினீர்கள். சற்று முன்னர் ஜெபத்திற்காக உங்களுடைய கரம் உயர்த்தப்பட்டது. நீங்கள் ஏதேனும் ஒரு சபையைத் தெரிந்து கொள்ளவில்லையென்றால், நாங்கள் இங்குள்ள பிரான்ஹாம் கூடாரத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இங்குள்ள எங்கள் அருமையான சகோதரன் ஆர்மன் நெவில் ஒரு தேவபக்தியுள்ள மனிதன். அவர் வேதாகமத்திலிருந்து சத்தியத்தைத் தவிர வேறெதையும் போதிக்கிறதில்லை. நீங்கள் எங்களுடைய ஐக்கியத்திற்கு வரவேற்கப்படுகிறீர்கள். நாங்கள் வெறுமனே ஒரு ஸ்தாபனம் அல்ல. நாம் வெறுமனே ஒரு ஐக்கியத்திற்காகவே ஒரு சபையாக இருக்கிறோம். நாங்கள் மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், பெந்தேகோஸ்துகள், லூத்தரன்கள் என எல்லோருமாக இருக்கிறோம். நாங்கள் உங்களை நேசிக்கிற கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். நீங்கள் உங்களுக்கு…கண்டறிய வேண்டுமென்றே நாங்கள் ஜெபிக்கிறோம். உங்களால் இங்கு வரஇயலாவிடின், நீங்கள் எங்காவது உண்மையான சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் ஒரு நல்ல சபை வீட்டை தெரிந்து கொள்ளுங்கள். எனவே அப்பொழுது நீங்கள் தேவனுடைய ஆவியானவரால் போஷிக்கப்படக்கூடும். 146 இன்றிரவு இந்த கட்டிடத்தைச் சுற்றிலும், சுற்றிலும்…கர்த்தர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டாரென்றால், நான் உங்களுக்கு சத்தியத்தை கூறியிருந்தால், அப்பொழுது தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற கடமைப்பட்டவராயிருக்கிறார். புரிகின்றதா? 147 ஓ, அதில் நம்பிக்கை வைக்க பயப்படாதீர்கள். அது ஒன்று வேதமாய், அது உண்மையானதாய் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது சத்தியமாயிராது. அது உண்மையாயில்லையென்றால் அப்பொழுது அது எப்போதும் எழுதப்பட்டதிலேயே பெரியதான வஞ்சகமாக இருக்குமே. ஏனென்றால் அது இலட்சக்கணக்கான ஆத்துமாக்களை வென்றுள்ளதே. நான் அநேக முறை ஒரு கரத்தில் குரானோடும், மற்றொரு கரத்தில் வேதாகமத்தோடும் முகமதியர்களுக்கு முன்பாக நின்று, “ஒன்று சரியானதாயிருக்கிறது மற்றொன்று தவறானதாய் இருக்கிறது. உண்மையாயிருக்கிற தேவனே பேசட்டும்” என்று கூறியிருக்கிறேன். பயப்படாதீர்கள். அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவர் ஒருபோதும் விட்டு விலகவேமாட்டார். 148 இப்பொழுது கர்த்தராகிய இயேசுவானவர், நாம் மேற்கோள் காட்டியிருக்கிறபடியே அவர் பூமியின் மேலிருந்தபோது அவர் செய்த கிரியைகளை, அதே காரியங்களைச் செய்ய முடிவின் நேரத்திற்கு முன்னதாக அவர் மீண்டும் வருவார் என்று வாக்குப்பண்ணினார். அவர் அதை தம்முடைய சபையினூடாகச் செய்வதாகக் கூறினார். இப்பொழுது அவர், “நான் திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள்” என்றார். இப்பொழுது திராட்சைசெடி கனியை கொடுக்கிறதில்லை. கொடிகளே கனியைக் கொடுக்கின்றன. 149 இப்பொழுது அது ஒரு பூசணிக்கொடியாயிருக்குமானால் அது பூசணிக் காய்களைக் கொடுக்கும். அது ஒரு தர்பூசணிக் கொடியாயிருக்குமானால் அது தர்பூசணிப்பழங்களையே கொடுக்கும். அது ஒரு முலாம்பழக் கொடியாயிருக்குமானால் அது முலாம்பழங்களை கொடுக்கும். அது ஒரு திராட்சைக் கொடியாயிருக்குமானால், அது திராட்சைப்பழைங்களைக் கொடுக்கும். 150 அது ஒரு கிறிஸ்தவனின் கொடியாயிருந்தால், அது கிறிஸ்துவை, கிறிஸ்துவின் ஜீவனை, கிறிஸ்துவின் கிரியைகளைக் கொடுக்கும். புரிகின்றதா? ஆகையால் நம்முடைய ஆவிகள் ஏதோ காரியத்தினால் ஊக்கமூடப்பட்ட வேண்டியதாயிருக்கிறது. 151 இன்றிரவு நான் அவருக்குள் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சிறுமந்தையே அது என்னை எப்படி உணரச் செய்கிறது என்பதை நீங்கள் அறியீர்கள். நான் நாற்பத்தி எட்டு வயதுடைய வயோதிக மனிதனாய் இங்கிருப்பதை அறிவீர்கள். இப்பொழுது நான் இருபத்தியேழு வருடங்களாக பிரசங்கித்திருக்கிறேன். என்னுடைய தோள்பட்டைகளும் கூனி குறுகிக் கொண்டிருக்கின்றன. ஓ, நான் இங்கே வீதியில் வழக்கமாக கோலி விளையாடும் சிறுபையனாய் இல்லை என்பதை நான் உணருகிறேன். ஆனால் நான் அறிந்துள்ள ஒரே ஒரு காரியம் என்னவெனில் நான் அவருடைய ஊழியக்காரனாயிருக்கிறேன் என்பதேயாகும். நான் அறிந்துள்ள எல்லாவற்றைக் காட்டிலும் நான் அவருடைய ஊழியக்காரனாயிருப்பதையே விரும்புவேன். ஏனென்றால் வேறெந்தக் காரியமானாலும் அது என்ன நன்மையை செய்யும்? 152 நான் ஜனங்களாகிய உங்களோடு நேர்மையாயிருக்க முயற்சித்திருக்கிறேன். நான் தேவனுடைய சமூகத்திலும், உங்களுடைய சமூகத்திலும் என்னால் செய்ய முடிந்த ஒவ்வொரு காரியத்திலும் நேர்மையாயும், நீதியாயும், உண்மையாயுமிருக்க முயற்சித்திருக்கிறேன். ஏனென்றால் அவர் நம்மை எல்லா நேரத்திலும் கவனிக்கிறார் என்பதை நான் அறிவேன். இப்பொழுது என்னால் கூடுமானால் … 153 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்கிறேன். நான் இன்றிரவு இந்த சிறிய செய்தியை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிட முயற்சித்தேன். ஆனால் அதனுடைய மற்ற காரியங்களை தேவனே உங்களுடைய இருதயத்தில் புரிந்து கொள்ளச்செய்வார் என்றே நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். தீவிரமாக, தீவிரமாக, தீவிரமாக உங்களால் முடிந்தளவு துரிதமாக பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள். உலகத்தில் தரித்திருகாதீர்கள். அந்த அர்த்தமற்றதிலிருந்து விலகிச் செல்லுங்கள். வெளியே செல்லுங்கள். இங்கிருந்து வெளியேறி கிறிஸ்துவோடு சுயாதீனமாயிருங்கள். அந்தக் காரியங்களிலிருந்து விலகிச் செல்லுங்கள். ஏனென்றால் பழமையான இந்த உலகமானது துண்டு துண்டாக வெடித்துச் சிதற, வெறுமனே புகைகளாக இந்த பூமியின் மேல் தூசியைத் தவிர வேறொன்றுமேயில்லாதிருக்கும் வேளை எது என்பது உங்களுக்கு தெரியாதே. அது இந்த ஆராதனை முடிவதற்கு முன்னதாகவே சம்பவிக்கக் கூடும். அது வேதவாக்கியங்களுக்கு முரண்பட்டதாகவே இருக்காது. அது வேத வாக்கியங்களை நிறைவேற்றுகிறதாகவே இருக்கும். சுவிசேஷமானது பிரசங்கிக்கப் பட்டிருக்கிறது. இதோ கடைசி செய்தி வருகிறதே. 154 இப்பொழுது எதிர்காலத்தில் மகத்தான காரியங்களுக்காக நோக்கிப் பார்க்காதீர்கள். அமெரிக்கா தன்னுடைய கிருபையின் நாளில் பாவத்தை செய்து விலகிக்கொண்டது. அது முற்றிலும் உண்மை. நீங்கள் இதை உங்களுடைய வேதாகமங்களில் குறித்து வைத்துக்கொண்டு, நான் கூறுவது சரியா அல்லது தவறா என்பதை கண்டறியுங்கள். அவள் இப்பொழுது இரண்டு வருடங்களாக கீழ்நோக்கி சரிந்து கொண்டிருக்கிறாள். 155 அண்மையில் பில்லிகிரஹாம் தன்னுடைய சிற்றுண்டி வேளையிலே இவ்வாறு கூறினார். அவர் வேதாகமத்தை உயர்த்திப் பிடித்தவாறு, “இதோ இருக்கிறது ஆதாரச் சட்டம், பவுல் ஒரு பட்டணத்திற்குள்ளாகச் சென்று ஒருவனை மனமாற்றமடையச் செய்துவிட்டு, பின்னர் அடுத்த வருடம் அங்கே திரும்பி வந்தபோது முப்பதுபேர்கள் மனமாற்றமடைந்திருந்தனர்” என்றார். மேலும் அவர் தொடர்ந்து, “நான் ஒரு பட்டணத்திற்குள்ளாகச் செல்கிறபோது ஒரு எழுப்புதல் உண்டாகி இருபதாயிரம் பேர்கள் மனமாற்றமடைகின்றனர். ஆனால் நான் ஆறு மாதத்திற்குள் அங்கே திரும்பி வருகையில் அதில் இருபது பேர்களைக்கூட காணமுடியவில்லையே” என்றார். 156 காரியம் என்ன? அங்கே குட்டையில் அநேக மீன்கள் இருக்கின்றன. ஆனாலும் நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டிருக்கிறவைகளை தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்னமே அறிந்துள்ளார். எனவே அந்த கடைசி ஒன்று உள்ளே வருகிறபோது அது அதனைத் தீர்க்கிறது. 157 அங்கே பறவைகள் பேழைக்குள்ளாகச் சென்றன. பல்வேறுபட்ட மிருகங்கள் அந்த பேழைக்குள் சென்றன. ஆனால் தேவனால் கதவு அடைக்கப்பட்டபோது, அவைகளில் அநேகம் உள்ளே செல்ல முயற்சித்தபோதிலும் அது அவைகளை வெளியே தடுத்து நிறுத்திவிட்டது. 158 என்னுடைய அருமையான நண்பனே, நீ உள்ளே இல்லையென்றால், தேவன் இப்பொழுது அழைத்துக் கொண்டிருக்கையிலே இப்பொழுதே நீ உள்ளே பிரவேசி. ஏனென்றால் இரக்கத்தின் கதவுகள் எந்த நேரத்திலும் புறஜாதியாருக்கு மூடப்படலாம். இப்பொழுது, இப்பொழுது நான் செய்கிறது என்னவென்றால், இப்பொழுது…இப்பொழுது நான் பேசுகிறது என்னவென்றால் … 159 நான் பேசியிருக்கிற என்னுடைய வார்த்தைகள், நான் மணிக்கணக்கில் பிரசங்கித்திருந்தாலும் அது நம்முடைய அன்பான கிறிஸ்துவினிடத்திலிருந்து வரும் ஒரு வார்த்தையின் பாதியளவு பொருளைக் கூட கொண்டிராது. இப்பொழுது நான் பிரசங்கித்திருக்கிறேன், ஆனால் நான் ஒன்று சத்தியத்தைக் கூறியிருக்க வேண்டும் அல்லது ஒரு பொய்யை கூறியிருக்க வேண்டும். எனவே நான் பொய்யைக் கூறியிருந்தால் தேவன் அதனோடு எதையுமே செய்யமாட்டார். ஆனால் நான் சத்தியத்தைக் கூறியிருந்தால் தேவன் தம்முடைய வார்த்தையின் பின்னே நிற்பார். எத்தனை பேர் என்று நீங்கள் கூறுகிறீர்கள்? ஐம்பது அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதா? 160 நீங்கள் ஒரு பகுத்தறியும் கூட்டத்தில் இருக்கின்றபோது, நாங்கள் ஏன் ஜெப அட்டைகளை கொடுக்க வேண்டியதாயிருக்கிறது என்பதை நான் உங்களுக்கு காண்பிக்க உள்ளேன். அவர் பகுத்தறிதலைச் செய்வார் என்று நான் கூறவில்லை. அவர் செய்யாமலுமிருக்கலாம். ஆனால் நீங்கள் என்னோடு நேர்மையாயிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது இங்குள்ள எத்தனையோ பேர்கள் இந்த வரிசையில் வர விரும்புகிறீர்கள்? நீங்கள் கட்டிடத்தில் எங்கிருந்தாலும் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். கட்டிடத்திலிருந்து கொண்டு வரிசையில் வரவிரும்புகிற ஒவ்வொருவரும் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது எப்படியெனில்…முதலாயிருப்பவர் யார்? புரிகின்றதா? உங்களால் அதைச் செய்ய முடியாது. எனவே நாங்கள் அமைதி குலையாமல் தடுத்து வரிசைப்படுத்த அட்டைகளைக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். 161 இப்பொழுது அவன் ஐம்பது அட்டைகளைக் கொடுத்துள்ளான். எனவே அந்த ஐம்பது அட்டைகளினூடாக எல்லா பக்கங்களிலிருந்தும் நாம் அழைப்போம். அப்பொழுது அது ஒவ்வொருவரும் வர ஒரு தருணமாயிருக்கும். 162 இப்பொழுது அது இங்கே நிகழவில்லையா? அதுதான் இங்கே நிகழுகிறதே! புரிகின்றதா? அது என்னைத் தொடுவதல்ல. அது அவரைத் தொடுவதாகும். எத்தனை பேர் புதிய ஏற்பாட்டின் எபிரேய புத்தகம், “நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய ஒரு பிரதான ஆசாரியனாய் கிறிஸ்து இருக்கிறார்” என்று கூறியுள்ளது என்பதை அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] நீங்கள் அவரைத் தொட்டீர்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வீர்கள்? அவர் உடனே திரும்பிப் பேசினது போலவே பேசுவதன் மூலமே. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரேயானால், அவர் நேற்று தம்மை வெளிப்படுத்தினதுபோலவே என்றென்றைக்கும் வெளிப்படுத்த வேண்டியவராயிருக்கிறார். ஆகையால் நீங்கள் பாருங்கள், யூதர்களுக்கும் மற்றவர்களுக்குமான கடைசி செய்தியை அவர் அதை எப்படித் தெரிவித்தார்? இப்பொழுது இது கடை … 163 அவர் வேறு ஏதாவது வழியில் ஒரு ஸ்தாபனத்தினூடாக தம்மை வெளிப்படுத்துவாரானால், அவர் அநீதியுள்ளவராயிருப்பார். அவர் தம்மை ஒருபோது ஒரு ஸ்தாபனத்தில் வெளிப்படுத்தினதேயில்லை. ஏனென்றால் அவருடைய நாட்களில் ஸ்தாபனமே இல்லை. நான் இந்த காலையில் கூறினதுபோல சுவற்றின் மேல் எழுதப்பட்ட கையெழுத்தினாலும், அதன் வியாக்கியானத்தினாலும் வெளிப்படுத்தினது போன்ற இயற்கைக்கு மேம்பட்ட வழியினூடாகவே தம்மை வெளிப்படுத்தினார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். இப்பொழுது தேவன் உங்களோடிருப்பாராக. 164 அவன், “ஒன்று முதல் ஐம்பது” என்றான். சரி. ஜெப அட்டை எண் ஒன்றை வைத்திருக்கிறது யார்? நீங்கள் உங்களுடைய கரத்தை சற்று உயர்த்துங்கள். உங்களுடைய அட்டைகளைப் பாருங்கள். சிலர் படுக்கையில் இருக்கலாம் அல்லது எங்காவது எழும்ப முடியாமல் இருக்கலாம். எனவே ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவருடைய அட்டையையும் நோக்கிப் பாருங்கள். அது வெறுமனே ஒரு சிறு அட்டையாயுள்ளது. அவைகளில் என்னுடைய படம் இருக்கும் என்று கூட நான் நினைக்கவில்லை. அது வெறுமனே ஒரு படமில்லாத சிறு அட்டையாயுள்ளது. எண் ஒன்று. நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? [யாரோ ஒருவர், “இங்கே” என்கிறார்.—ஆசி.] சரி, ஐயா நீங்கள் எங்கேயிருக்கிறீர்களோ, அங்கேயே அப்படியே எழும்பி நில்லுங்கள். எண் இரண்டு, நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அந்தப் பெண்மணி இங்கே இருக்கிறார். எண் மூன்று, நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். [ஒலிநாடாவில் காலி இடம்.] 165 நாம் அந்நியர்களாயிருக்கிறோம். இதுவே ஜீவியத்தில் நம்முடைய முதல் முறையான சந்திப்பு என்று நான் நினைக்கிறேன். ஆகையால் கர்த்தர் நம்மிருவரையும் அறிந்திருக்கிறார். அவர் உங்களைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவர் என்னைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். ஆனால் அவர் கூடுமானால்…அவருடைய தயவில்… 166 நான் உங்களிடத்தில், “ஓ, ஐயா, நீங்கள் சுகவீனமாயிருக்கிறீர்கள். நான்…நீங்கள் சுகமடையப் போகின்றீர்கள்” என்று கூறுவேனேயானால் நீங்கள் அதைக் குறித்து சந்தேகப்பட வாய்ப்பு உண்டு. கூட்டத்தார் அதன்பேரில் தடுமாற வாய்ப்பு உண்டு. நிச்சயமாகவே. ஏனென்றால் நீங்கள் என்னுடைய வார்த்தையை மட்டுமே கேட்டிருக்கிறீர்கள். 167 ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து ஒருவனிடத்தில் அவன் செய்திருக்கிற ஏதோ காரியத்தைக் கூற, அதைக் குறித்து நான் ஒன்றுமே அறியாதிருக்க, ஆனால் அவன் அதை செய்திருப்பானேயானால் அப்பொழுது அவன் அது சரியா அல்லது தவறா என்று அறிந்து கொள்வான். 168 ஆகையால் அது என்னவாயிருந்தது என்பதை அவர் அறிந்திருப்பாரேயானால், நிச்சயமாகவே, அது உண்மையானால் அப்பொழுது அது என்னவாயிருக்கும் என்பதை அவரால் கூறமுடியும். அப்பொழுது அது சரியாயிருக்கும். 169 திருமதி காக்ஸ் நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்களா? திருமதி காக்ஸ் அங்கே அமர்ந்திருந்தாள். நான் அவளை தற்செயலாக கவனிக்க நேர்ந்தது. அவள் கென்டக்கியிலிருந்து இங்கே வருகிறாள். அதாவது திருமதி உட்ஸ்…இங்கு எங்கோ சபையில் அவளுடைய தாயோடு இருக்கிறாள். புற்றுநோய் இங்கு அவளுடைய முகத்தை அரித்துவிட்டிருந்தது. 170 அப்பொழுது நான் வடப்புற காடுகளிலிருந்து வந்து கொண்டிருந்தேன். என்னுடைய மனைவி என்னை தொலை பேசியில் அழைத்து, “நான் என்னுடைய ஜீவியத்தில் திருமதி உட்ஸ் அவர்களைப் போல எவருமே சின்னா பின்னமான பாதிப்புக்குள்ளாக நலங்குன்றியிருந்ததைக் கண்டதேயில்லை” என்றாள். திருவாளர் மற்று திருமதி உட்ஸ் அவர்களும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் அந்த ஸ்திரீயினண்டை சென்று கர்த்தர் உரைக்கிறதாவதோடு திரும்பி வந்தேன். அப்பொழுது புற்றுநோய் மரித்துப் போய் விட்டது. 171 அங்கே அதோ அந்த ஸ்திரீ அமர்ந்து கொண்டிருக்கிறாள். என்னவென்பதை…உங்களால் கூறமுடியாது. எனவே திருமதி காக்ஸ் ஜனங்கள் காணும்படியாக நீங்கள் சற்று எழும்பி நில்லுங்கள். அவளுடைய மூக்கு முழுவதுமே புற்று நோயினால் அரிக்கப்பட்டு, அவளுடைய கண்கள் வீங்கிப்போய்விட்டன. அங்கே பின்னால் உள்ள கூட்டத்தார் உங்களைக் காணும்படி திரும்பி நில்லுங்கள். புற்றுநோய். அவர் எப்பொழுதுமே சரியாகவே இருக்கிறார். அவர் ஒருபோதும் தவறாயிருப்பதேயில்லை. 172 இப்பொழுது நம்முடைய தேவனாகிய கர்த்தர் இந்த சகோதரனுக்கு வெளிப்படுவாரானால், அவர் இங்கே என்னத்திற்காக இருக்கிறார் என்பதை தேவனாகிய கர்த்தர் அவருக்கு வெளிப்படுத்துவாரானால் அப்பொழுது இவரே நியாயாதிபதியாயிருக்கட்டும். அல்லது அவர்…அந்த ஸ்திரீக்கு செய்தது போல, அல்லது நாத்தான்வேல் அவரைக் கண்டபோது…இல்லை நாத்தான்வேல்…பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டபோது, அவர் பிலிப்புவினிடத்தில் கூறினதுபோல அவர் கூறுவாரானால் நலமாயிருக்கும். அவர் அதை வெளிப்படுத்துவார். நீங்கள் எல்லோரும் அதை விசுவாசிப்பீர்களா? ஜனங்களே யாவரும் அதை விசுவாசிப்பீர்களா? இந்த மனிதனைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அவர் அறிந்திருக்கிறார். நான் என்னுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறேன். நான் இவரைக் குறித்து ஒன்றுமே அறியேன். எனக்கு அவரை தெரியாது அல்லது அவருக்கு என்னைத் தெரியாது என்று அவர் தன்னுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறார். ஆகையால் கர்த்தர் அதை வெளிப்படுத்துவாரானால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? எத்தனை பேர்கள் அதை ஏற்றுக்கொள்வீர்கள்? நான் சற்று காணும்படி உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 173 இப்பொழுது ஐயா, நான் இங்கே வெறுமனே நின்றுகொண்டு அவர் என்னிடம் என்ன கூறியுள்ளார் என்பதை காணும்படி காத்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால் நீங்களே நியாயாதிபதியாயிருங்கள். ஒரு மனிதன் கண்களை மூடியிருக்கிறதை எவரேனும் நோக்கிப் பார்க்கக்கூடுமானால் அப்பொழுது அது ஒரு மனோதத்துவமாய் இருக்கமுடியாது என்பதை நீங்களே காண்பீர்கள். உங்களுடைய கண்கள் மூடியிருப்பதோடு அப்படியே தரித்திருங்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு…அதை வெளிப்படுத்துவாரானால், நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருப்போம். 174 ஆனால் எனக்கு முன்பாக நிற்கிற மனிதன் இங்கே எதற்காக நிற்கிறாரென்றால் அது அவர் விரும்புகிறதான ஒரு ஆவிக்குரிய பிரகாரமான செயலுக்கான ஜெபத்திற்காகும். அது உண்மை. [அந்த மனிதன், “அது உண்மை” என்கிறார்.—ஆசி.] அது உண்மையானால் ஜனங்கள் காணும்படியாக உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் என்னுடைய ஜீவியத்தில் அவரைக் கண்டதேயில்லை. ஆனால் இங்கேயே அது இருந்தது. ஏதோ காரியம் அவருடைய சிந்தையை தொந்தரவு செய்து கொண்டிருந்தது. இப்பொழுது நான் அவரிடத்தில் அதிகமாக பேசுவேனாகில் அதிகம் கூறப்படும். இப்பொழுது பயபக்தியாயிருங்கள். 175 அந்த தூதன் என்ன செய்தார்? அவர் தன்னுடைய முதுகை திருப்பியிருக்கும்போதே அவர், “சாராள் ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். அப்பொழுது அவள், “நான் சிரிக்கவேயில்லை” என்றாள். அதற்கு அவர், “ஓ, ஆம், நீ சிரித்தாய்” என்றார். அந்த காரணத்தால் அவள் பயமடைந்தாள். 176 இப்பொழுது கூட்டத்தார் தொடர்ந்து என்னுடைய சத்தத்தை ஒலிபெருக்கிகளின் வாயிலாக கேட்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். என்னிடத்தில்லிருந்து ஒரு மனிதன் போவது போன்று தோன்றுகிறது. நான் ஒரு ஸ்திரீயைக் காண்கிறேன். அந்த மனிதன் இங்கே இருப்பதற்கான முக்கிய காரியமே அதுதான். அது அவனுடைய மனைவிக்காகவே. அவள் அவனோடு இங்கிருக்கவில்லை. அவளுக்கு பெண்களுக்கான ஒரு கோளாறு, ஸ்திரீகளுக்கான ஒரு கோளாறு உண்டாயிருக்கிறது. அவளுக்கு அவளுடைய முதுகில் கோளாறு உள்ளது. அது உண்மை. 177 நீ இந்தப் பட்டிணத்திலிருந்து வந்திருக்கவில்லை. [அந்த மனிதன், “அது உண்மை” என்கிறார்.—ஆசி.] நீர் மார்ஸ்வில்லி என்று அழைக்கப்படுகின்ற வேறொரு பட்டணத்திலிருந்து வந்திருக்கிறாய். [“அது உண்மை”.] அது சரி. இப்பொழுது வீட்டிற்குச் சென்று, நீர் அதை விசுவாசித்திருக்கிற விதமாகவே அதைக் கண்டடைவீர். அது கர்த்தருடைய நாமத்தில் அந்த விதமாகவே இருக்கும். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அந்தக் கைக்குட்டையை, நீ அதை அவளிடத்தில் கொண்டு செல்ல வேண்டியதில்லை. நீ அதை அவளுக்காக உன்னுடைய சட்டைப்பையில் வைத்திருக்கிறாய். ஆனால் அது உனக்குத் தேவையில்லை. 178 நான் உன்னை அறிவேன். ஆனால் நான் உன்னுடைய பெயரை அறியேன். நீ அங்கே அந்த பின்பக்க கதவண்டை நின்று கொண்டிருந்த ஒரு ஸ்திரீயாய் இருக்கிறாய். ஓர் நாள் நீ முதல் முறையாக கூடாரத்தண்டை வந்திருந்தபோது கர்த்தருடைய தூதனானவர் என்னிடத்தில் வந்து பரிபூரண இரகசியமாயிருந்த ஒரு காரியத்தை வெளிப்படுத்தினார். நீ புற்று நோயிலிருந்து சுகமாக்கப்பட்டாய். அது உண்மை. [அந்த ஸ்திரீ, “அது உண்மை” என்கிறாள்.—ஆசி.] ஆனால் இப்பொழுது உன்னோடுள்ள கோளாறு என்ன என்ற சிந்தனையே எனக்கு இல்லை. எனக்குத் தெரியாது, நீங்கள் அதை அறிவீர்கள். உங்களோடுள்ள கோளாறு என்ன என்பதைக் குறித்த எந்த சிந்தனையும் என்னிடத்தில் இல்லை. ஆனால் கர்த்தர் அதை வெளிப்படுத்துவாரானால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? [“ஆம்.”] நான் … 179 நீங்கள் உங்களுக்காக இங்கில்லை. நீங்கள் ஒரு குழந்தைக்காக இங்கிருக்கிறீர்கள். அந்தக் குழந்தை அவதியுற்றிருக்கிறது. [அந்த ஸ்திரீ, “ஆம்” என்கிறாள்.—ஆசி.] அதற்கு முதுகுத்தண்டில் வேதனை இருக்கிறது [“ஆம்”.] அதாவது எழும்பி நிற்க முடியாத அல்லது அதைப்போன்ற ஏதோ காரியமாய் உள்ளது. நான் அந்தப் பிள்ளையின் பெற்றோர்களை ஒரு ஜெபமாலையோடு காண்கிறேன். அவர்கள் கத்தோலிக்கர்களாயிருக்கிறார்கள். [“ஆம்”.] ஒரு வயோதிகத் தம்பதியினரைக் காண்கிறேன். அது அதினுடைய பாட்டனாரும், பாட்டியுமாயிருக்கிறது. அவர்களும் கூட கத்தோலிக்கர்களாயிருக்கின்றனர். [“ஆம்”.] நீங்கள் அந்த குழந்தைக்காக நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய கைக்குட்டையை எடுத்து அதின்மேல் வையுங்கள். சந்தேகப்படாதீர்கள். நீங்கள் கேட்கிறதைப் பெற்றுக்கொள்ள முடியும். இப்பொழுது உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 180 இந்தப் பெண்மணி எனக்கு ஒரு அந்நியராயிருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கிறோம். ஆனால் நம்மிருவரையும் கர்த்தராகிய இயேசு அறிந்திருக்கிறார். இப்பொழுது இங்கே இது ஒரு பரிபூரண காட்சியாயிருக்கிறது. இங்கே இது பரிசுத்த யோவான் 4ம் அதிகாரத்தின் ஒரு காட்சியைப் போன்றுள்ளது. ஒரு கறுப்பு நிற ஸ்திரீ, ஒரு வெள்ளையன், அந்த நாளில் அது ஒரு சமாரியனும், ஒரு யூதனுமாயிருந்தது. இரண்டு இன மக்கள். இயேசு சீக்கிரத்தில் வித்தியாசமே இல்லை என்பதை அவள் அறிந்துகொள்ளும்படி செய்தார். நாம் யாவரும் தேவனுடைய சிருஷ்டிகளாயிருக்கிறோம். நாம் ஜீவிக்கிற தேசத்தில் உள்ள நம்முடைய நிறமாற்றத்திற்கும் இதற்கு சம்மந்தம் கிடையாது. தேவன் அந்தவிதமாக தம்முடைய ஜனங்களை விரும்பினார். அவர் வெள்ளை, கறுப்பு, பழுப்பு, மஞ்சள், சிவப்பு என்றே மனிதனை உண்டாக்கினார். அவர் அவர்களை அந்தவிதமாகவே உண்டாக்கினார். அது அவருடைய வேலையாயிருக்கிறது. அவர் நம் எல்லோரையும் நேசிக்கிறார். ஆனால் இங்கே இது ஒரு பரிபூரண காட்சியாயிருக்கிறது. இதற்கு முன்பு ஒருபோதும் சந்தித்திராத இரண்டு வித்தியாசமான இன மக்கள், இது நம்முடைய முதல் சந்திப்பாயிருக்கிறது. 181 இப்பொழுது, நீ ஒரு விசுவாசி என்பதை நான் காண்கிறேன். நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கின்றீர்கள். ஏனென்றால் உங்களுடைய ஆவியானது மகிழ்ந்து வரவேற்கிறதாயிருக்கிறது. அந்த மகத்தான தேவனுடைய தூதனானவர் தவறாயிருந்த எந்த காரியத்தையும் வரவேற்கமாட்டார். நிச்சயமாக வரவேற்கமாட்டார். அங்கே அந்த புகைப்படத்தில் உள்ள அந்த தூதனை, நான் நின்று கொண்டிருப்பதற்கு மேலே உள்ள அந்த ஒளியை, அங்கே மேலே அந்த புகைப் படத்தில் நீங்கள் காண்கிறீர்களா? அதுவே இப்பொழுது நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிற விதமாகவே உங்களை உணரச் செய்து கொண்டிருக்கிறது. அது அப்படியே உங்கள் மீது முழுமையாக வந்து கொண்டிருக்கிறது. சகோதரி கெர்ட்டி அப்படியே ஒரு நிமிடம். 182 அது ஏதோ காரியமாயிருக்க வேண்டும் என்பது போல் தென்படுகிறது. என்னால் சரியாக அந்தப் பெண்மணியைக் குறித்து அறிந்துகொள்ள முடியவில்லை. ஆம், அந்த ஸ்திரீ ஒரு நரம்புக்கோளாறு நிலைமையினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள். அவள் நரம்பு தளர்வுற்றிருக்கிறபடியால் பொருட்களை தவறி விட்டு விடுகிறாள். அது உண்மை. நீங்கள் தீர்வு காண முயற்சித்துக் கொண்டிருக்கிற ஒரு ஆவிக்குரிய பிரச்சனை உண்டு. ஏனென்றால் நீங்கள் சில நேரங்களில் அதற்காக ஜெபித்துக் கொண்டு வருகிறீர்கள். அது உண்மை. உங்களுக்கு மூட்டு வீக்கம் உள்ளது. மேலும் காலையில் நீங்கள் உங்களுடைய படுக்கையிலிருந்து மெதுவாக எழும்ப முயற்சிப்பதை நான் காண்கிறேன். உங்களுடைய முதுகுத்தண்டில், முதுகுத்தண்டிலும் கூட உங்களுக்கு ஏதோ கோளாறு உண்டு. அது கர்த்தர் உரைக்கிறதாக இருக்கிறது. 183 நீங்கள் என்னை தேவனுடைய தீர்க்கதரிசியென்று விசுவாசிக்கிறீர்களா? சீமோனை அறிந்திருந்த அதே தேவன் உங்களை அறிந்துகொள்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் அதை வெளிப்படுத்துவாரானால், நீங்கள் எதைப் பெற வேண்டுமோ அதைப் பெற்றுக்கொள்ள அது உங்களை ஒரு திடமான விசுவாசியாக்குமா? அவர்கள் உங்களை “செவிலித்தாய்” என்று அழைக்கிறார்கள். [அந்த சகோதரி, “ஆமென்” என்கிறாள்.—ஆசி.] உங்களுடைய கடைப்பெயர் ஜான்சன். [“ஆமென்”] நீங்கள் நியூ ஆல்பனியில் வசிக்கின்றீர்கள், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வீட்டிற்கு திரும்பிச் சென்று சுகமாயிருங்கள். ஆமென். அப்படியே விசுவாசியுங்கள். 184 ஸ்திரீயே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள்தானே? நாம் அந்நியர்கள். எனவே ஜனங்கள் காணும்படியாக நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “நாம் அந்நியர்களாக இருக்கிறோம்” என்று காண்பியுங்கள். வெறுமனே,…இப்பொழுது தேவனாகிய கர்த்தர் நம்மிருவரையும் அறிந்திருக்கிறார். அவர் இந்த வேண்டுகோளை அருளுவாரானால் இப்பொழுது அதற்காக நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பீர்களா? இப்பொழுது உங்களில் சிலர் விசுவாசிக்கத் துவங்கியிருக்கின்றீர்கள். 185 இப்பொழுது இங்கே இந்த ஸ்திரீக்கு முன்பாக ஒரு வெள்ளைக்கார மனிதன் தொடர்ந்து காட்சியளித்துக் கொண்டேயிருக்கிறான். 186 அது அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற மனிதனாயிருக்கிறது. நீ…அது சரி. நீர் எங்கேயிருக்கிறீரோ அங்கேயே தரித்திருங்கள். உங்களுக்கு சிறுநீரகக்கோளாறு உண்டு. உங்களுக்கு முதுகிலும் கோளாறு உள்ளது. உங்களுக்கு வயிற்று கோளாறும் உண்டு. அது உண்மை. இப்பொழுது போய் விசுவாசியுங்கள். அது இனி ஒருபோதும் உங்களை தொல்லைப்படுத்தாது. 187 நீங்கள் அப்படியே விசுவாசியுங்கள். நீங்கள் இதை விசுவாசிக்கும்படியாக நான் உங்களுடைய விசுவாசத்திற்கு சவாலிடுகிறேன். எத்தனைபேர் இதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்கள்? [சபையார், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] சரி, ஆகையால் விசுவாசத்தில் கவனம் வைத்து பிழையுங்கள். 188 எனக்கு முற்றிலும் அந்நியராயிருக்கிற இந்த ஸ்திரீக்கு நம்முடைய தேவனாகிய கர்த்தர் வெளிப்படுத்துவாரானால் நலமாயிருக்கும். நம்முடைய கரங்கள் மேலே உயர்த்தப்பட்டிருக்கின்றன. நாம் இதற்கு முன்பு ஒருவரையொருவர் மனப்பூர்வமாக சந்தித்ததேயில்லை. நம்முடைய தேவனாகிய கர்த்தர் சமாரிய ஸ்திரீக்கு செய்தது போன்ற அதே காரியத்தை, இந்த ஸ்திரீக்கு வெளிப்படுத்துவாரானால் நலமாயிருக்கும். அப்பொழுது நீங்கள் யாவரும் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களா? அப்பொழுது அது இதனை என்றென்றைக்குமாய் உங்களுக்கு தீர்த்து வைக்கும். [சபையோர் “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] 189 பாருங்கள், நான் வரவிருக்கின்ற ஒரு கூட்டத்தை உடையவனாயிருக்கிறேன். நான் நாளைய தினம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். நான் சம்பவிக்கவிருக்கின்ற ஒரு பெரிய கூட்டத்திற்காக வெர்ஜினியாவிற்கு செல்ல வேண்டியதாயிருக்கிறது. நான் இங்கு நின்றுகொண்டு மிகவும் பலவீனமடைய விரும்பவில்லை. சரி, நான் அப்படியே இந்த ஸ்திரீயோடு சற்று நேரத்தை எடுத்துக்கொள்ள விருக்கிறேன். நீங்கள் விசுவாசியுங்கள். 190 எப்பொழுதுமே இந்த ஸ்திரீயை, பயங்கரமாகக் காணக்கூடிய ஒரு இருள் அவளை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஓ, அது—அது துக்கமாயிருக்கிறது. உங்களுக்கு ஏதோ கோளாறு இருந்து வருகிறது. நீங்கள் ஒரு குழந்தையை, ஒரு பிள்ளையை இழந்து விட்டீர்கள். [அந்த ஸ்திரீ, “ஆம்” என்கிறாள்.—ஆசி.] அது உண்மை. மேலும் மற்றொரு காரியம் நீங்கள் ஸ்திரீகளுக்கான ஒரு கோளாறினால், பெண்களுக்கான ஒரு கோளாறினாலும், முதுகுத் தொல்லையினாலும் அவதியுறுகின்றீர்கள். நீங்கள் மயங்கி விழுவதுபோன்ற ஏதோ ஒரு காரியமும் கூட உங்களுக்கு சம்பவித்திருக்கிறது. ஓ, காக்காய் வலிப்பு. அது உண்மை. நீங்கள் இந்தப் பட்டணத்திலிருந்து வரவில்லை. நீங்கள் இங்கு வருவதற்கு ஆற்றைக் கடந்தீர்கள். நீங்கள் லூயிவில்லிலிருந்து வந்திருக்கிறீர்கள். [“ஆம்”.] நீங்கள் 1754 என்ற எண் கொண்ட வெஸ்ட் ஓக் தெருவில் வசிக்கிறீர்கள். [அந்த ஸ்திரீ, “ஆம், நான் அங்குதான் வசிக்கிறேன்.” என்று கதறுகிறாள்.] உங்களுடைய பெயர் மார்கிரேட் குயின். [“ஆம்”.] சரி. 191 தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவரே இந்த ஸ்திரீ என்ன வாஞ்சிக்கிறாளோ அதை அருளும். நான் இந்த சத்துரு அவளை விட்டுச் செல்லும்படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். 192 ஸ்திரீயே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இனி சந்தேகப்படாதீர்கள். போய் நீங்கள் கேட்டிருக்கிறதை இப்பொழுதே பெற்றுக்கொள்ளுங்கள். 193 நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] 194 ஐயா, நீங்கள் எப்படியிருக்கின்றீர்கள்? இதுவே நம்முடைய முதல் முறையான சந்திப்பு என்று நான் நினைக்கிறேன். நம்முடைய தேவனாகிய கர்த்தர் இங்கே கிரியை செய்யவும், நீங்கள் வாஞ்சிக்கிற காரியங்களை உங்களுக்கு அருளவும் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த மனிதன், “ஆம், நான் விசுவாசிக்கிறேன், அவர் இங்கிருக்கிறார் என்று நான் அறிவேன். என்னால் அவரைக் காணமுடிகிறது” என்கிறார்.—ஆசி.] நான் உங்களுடைய துணிவை வியந்து பாராட்டுகிறேன். நீங்கள் இங்கே ஒரு முறையான காரியத்திற்காக இங்கே இருக்கின்றீர்கள். [அது உண்மை. அது சரி.] நீங்கள் குடிப்பழக்கத்தையும், புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் விட்டுவிட விரும்புகிறீர்கள். [“அதுதான்”] பாருங்கள். இது இப்பொழுது உங்களிடத்திலிருந்து போய் விட்டது. போய் வாருங்கள். தேவனுடைய சமாதானம் உங்களோடு இருந்து, உங்களை விசுவாசமுள்ளவராக்குவதாக. தேவன் உங்களோடிருப்பாராக. “நீ விசுவாசிக்கக் கூடுமானால் எல்லாம் கூடும்”. 195 நீங்கள் அந்த முதுகுக் கோளாறிலிருந்து விடுதலை பெற விரும்புகின்றீர்களா? அங்கே போய் அவரை துதியுங்கள். அப்பொழுது நீங்கள் அதிலிருந்து விடுதலை பெறுவீர்கள். போய் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 196 வேதம், “நீ விசுவாசிக்கக்கூடுமானால்” என்று உரைத்துள்ளது. பயபக்தியாயிருங்கள். தேவன் செய்து கொண்டிருக்கிறது சத்தியமாயிருக்க வேண்டும் என்றே விசுவாசியுங்கள். 197 நான் உங்களை அறிவேன். நான் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். நான் உங்களுடைய கோளாறை அறிவேன். 198 தேவனாகிய கர்த்தாவே, இந்த ஸ்திரீயினிடத்தில் இரக்கமாயிருந்து இந்த வேண்டுகோளை அருளும். நான் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். எனக்கு ஞாபகமில்லை…உங்களுடைய பெயர் பேக்கரா? [அந்த சகோதரி, “ஆம்” என்கிறாள்.—ஆசி.] அது உண்மை. இப்பொழுது எனக்கு ஞாபகம் வருகிறது. தேவன் உங்களை ஆசீர்வதிபாராக. இப்பொழுது ஊக்கமாகச் சென்று உங்களுடைய முழு இருதயத்தோடு அவரை விசுவாசியுங்கள். சரி. 199 ஸ்திரீயே நான் உன்னை அறியேன். நாம் அந்நியர்கள். அது உண்மை. நீங்கள் இந்நேரம் வரை உங்களுக்கு இருந்து வருகிற அந்த வயிற்றுக்கோளாறான குடல்புண் நீங்கும்படியாகவும், உங்களுடைய இரவு ஆகாரத்தைப் புசிக்கவும் விரும்புகிறீர்களா? அப்படியானால் போய் புசியுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். 200 நான் உங்களை அறியேன். உங்களுடைய தொல்லை என்னவென்பதை நான் அறிவேன். எனக்கு அது தெரியும் என்பது உங்களுக்குத் தெரியாது—உங்களுக்குத் தெரியாது. ஆனாலும் எனக்கு—எனக்கு அது தெரியும். அதன் காரணமாகவே நீங்கள் இங்கே கூடாரத்திற்கு வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் கூறமாட்டேன். ஆனால் நீங்கள் இதை விசுவாசிப்பீர்களேயானால் மூட்டுவீக்கம் உங்களை விட்டு நீங்கிவிடும். நீங்கள் உற்சாகமாக செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 201 நாம் “தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக” என்று கூறக்கடவோம். [சபையோர், “தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக” என்கிறார்கள்—ஆசி.] 202 நீங்கள் நரம்புத் தளர்ச்சியாயுங்கூட இருக்கின்றீர்கள். உங்களை தொல்லைப்படுத்துகிற ஒரு வயிற்றுக்கோளாறும் உண்டு. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “நான் விசுவாசிக்கிறேன்” என்கிறாள்.—ஆசி.] அப்படியானால் போ, தேவனுடைய சமாதானம் உங்கள் மேல் தங்கியிருக்கும். தேவன் அதைச் செய்வார் என்று உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கும்படியாக உங்கள் மீது சற்று கரங்களை வைக்க விரும்புகிறேன். 203 ஸ்திரீயே நான் உனக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன் என்று நினைக்கிறேன். உனக்கு என்னைத் தெரியுமா? நீ இங்கே சபைக்கு வருகிறாயா? நீ வருகிறாய். நான் உன்னை ஒருபோதும் கண்டதேயில்லை. தொடர்ந்து அநேக ஜனங்கள் உள்ளே வருகிறார்கள். சரி, நீ விசுவாசித்துக் கொண்டே செல், உனக்கிருந்த அந்த ஸ்திரீகளுக்கான கோளாறு, அந்த பெண்களுக்கான கோளாறு உன்னை விட்டு நீங்கிப்போகும். நீ விசுவாசிக்கிறாயா? [அந்தப் பெண்மணி, “ஆம்” என்கிறாள்.—ஆசி.] அப்படியானால் போ, தேவன் உங்களோடிருந்து உங்களுக்கு உதவி செய்வார் என்ற நிச்சயமுடையவனாய் நான் இருக்கிறேன். 204 ஐயா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தர் உங்களிடத்திலிருந்து அந்த விரைப்புத்தன்மையை எடுத்துப்போட்டு, அந்த மூட்டு வலியிலிருந்து உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கிருந்து திரும்பிச்செல்கையில் இதற்காக அவருக்கு நன்றி செலுத்தி, அவருக்கு துதி செலுத்துங்கள். அப்பொழுது நீங்கள் சுகமடைவீர்கள். 205 ஸ்திரீயே, நீ நரம்புக்கோளாறினால் அவதியுறுகின்றாய், இல்லையா? அது ஒரு மனநிலை பாதிப்புக்குள்ளான நரம்புத்தளர்ச்சி. நீ உண்மையாகவே பலவீனமடைந்து, மயக்கத்தினால், விசேஷமாக பிற்பகலில் அவதியுறுகிறாய். நீ உன்னுடைய சிந்தையை இழந்துவிடப் போகின்றாய் என்று சாத்தானும் கூட உன்னிடத்தில் கூறியிருக்கிறான். அது உண்மை. ஆனால் அது ஒரு பொய். நீ சுகமடையப்போகிறாய். நீ குறிப்பிட்ட ஜீவிய நேரத்தில் மட்டுமேயன்றி மற்றபடி அவ்வாறிருக்கமாட்டாய். அது இறுதி மாதவிடாயாயிருக்கிறது. ஒவ்வொரு ஸ்திரீயும் அந்நிலைக்கு வரவேண்டியவளாயிருக்கிறாள். ஆனால் இப்பொழுதே நீ சுகமடையப் போகின்றாய். நீ என்னுடைய வார்த்தையை விசுவாசிக்கிறாயா? அப்படியானால் தேவனுக்கு நன்றி கூறி. பாடல்களைப் பாடி, களி கூர்ந்துகொண்டே போ. நீ சுகமடைவாய். 206 சரி, ஸ்திரீயே, நானும் கூட உனக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன். நான் அதை அவளிடத்தில் கூறினபோது அது விநோதமான காரியமாய் இருந்தது. ஆனால் உனக்கும் சரியாக அதே நரம்புக்கோளாறு இருந்தபடியால், அது அதே நேரத்தில் உன்னை விட்டுப் போய்விட்டது. இப்பொழுது நீ உன்னுடைய சாலையில் செல்லும்போது உன்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசி. அப்பொழுது நீ சுகமடைவாய். ஆமென். போய் உன்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசி. 207 ஸ்திரீயே நான் உன்னை அறிவேன். நான் உங்களுடைய முகத்தை நன்கு அறிந்திருக்கிறேன். ஆனால் எனக்கு…தெரியவில்லை. தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் இங்கே கூடாரத்திற்கு வருகிற ஒரு பெண்மணியாயிருக்கிறீர்கள். தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களுக்காக சற்று ஜெபிக்கட்டும். 208 தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவரே, இந்த ஸ்திரீயை சுகப்படுத்தும் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். 209 சந்தேகப்படாதீர்கள், அந்த ஸ்திரீயினுடைய பெயரை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் யார் என்பதை…நான் அறிவேன். 210 இங்கே கூட்டத்தில் உள்ள ஜனங்களாகிய உங்களைக் குறித்து என்ன? நீங்கள் விசுவாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இப்பொழுது மிகவும் அமைதியாய் அமர்ந்திருங்கள். உண்மையான பயபக்தியோடு இருங்கள். இங்கே இந்த திசையில் யாரோ ஒருவர் இருக்கிறார். நீங்கள் இதை விசுவாசிக்கும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுடைய விசுவாசத்திற்கு நான் சவாலிடுகிறேன். 211 அங்கே ஒரு கறுப்பு நிற ஸ்திரீ தன்னுடைய கரங்களை மேலே உயர்த்தியிருக்கிறாள். பெண்மணியே, நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரனென்று விசுவாசிக்கின்றீர்களா? [அந்த ஸ்திரீ, “ஆம்” என்கிறாள்.—ஆசி.] உங்களுடைய தொல்லை என்னவென்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? [“ஆம் ஐயா”] நீங்கள் உங்களுக்காகவும், அந்த சிறு பெண்ணிற்காகவும் ஜெபிக்க விரும்புகிறீர்கள். உங்களுடைய கண்களுக்காவே அங்கே அமர்ந்திருக்கிறீர்கள். அது உண்மை. நீங்கள் உங்களுடைய கரத்தை அந்த குழந்தையின் மீது வைத்து உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 212 தேவனாகிய கர்த்தாவே, அவர்கள் அதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] 213 இந்த கறுப்பு நிற தலையையுடைய நபருக்கு அருகே கர்த்தருடைய தூதனானவர் நின்று கொண்டிருக்கிறார். அவர் இங்கே சபைக்கு வருகிறார் என்று நான்—நான் நினைக்கிறேன். ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஐயா, நான் உங்களை அறிதிருந்தாலும், தேவன் உங்களுடைய கோளாறு என்னவென்பதை வெளிப்படுத்தினாலொழிய அது என்னவென்பதை நான் அறியேன். ஆனால் இங்கே அவருடைய இரக்கம் கொஞ்சம் நின்று கொண்டிருக்கிறது. உங்களுடைய பாதத்தில், இடது பாதத்தில் உங்களுக்கு புண் இருக்கிறது. அது உண்மை. உங்களுடைய—உங்களுடைய விசுவாசம் ஏதோ காரியத்தை தொட்டுவிட்டது. 214 மேலே உள்ள இந்தப் பிரிவில் இருக்கும் உங்களைக் குறித்து என்ன? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆம்” என்கிறார்கள்.—ஆசி.] அப்படியானால் விசுவாசமுடையவர்களாக இருங்கள். சந்தேகப்படாதீர்கள். 215 இதோ ஒரு கறுப்புத் தொப்பியோடு, மூக்குக்கண்ணாடி அணிந்தவளாய் இங்கே ஒரு ஸ்திரீ அமர்ந்திருக்கிறாள். ஸ்திரீயே, நீ ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கிறாயா? அங்கே அந்த சிறு பையனுக்கு பின்னால் உள்ள வரிசையின் கடைசியில் உள்ளவரே, உங்களைத்தான். நீங்கள் ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கிறீர்களா? உங்களிடத்தில் ஜெப அட்டை இல்லை. நீங்கள் என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய தொல்லை என்னவென்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், அப்பொழுது நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? உங்களுக்கு இருதயக்கோளாறு உள்ளது. அது உங்களுக்கு அடுத்து அமர்ந்துள்ள உங்களுடைய கணவனாய் உள்ளது. அவருக்கு சுரப்பிக்கோளாறு உள்ளது. இப்பொழுது போய், விசுவாசியுங்கள். அவரை விசுவாசிக்கிறவர்கள் யார்? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] 216 இங்கே அமர்ந்திருக்கிற இந்த கறுத்த மனிதனைக் குறித்து என்ன? ஐயா, நீர் விசுவாசிக்கிறீரா? [அந்த மனிதன், “ஆம் ஐயா” என்கிறர்.—ஆசி.] நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? [“ஆம்”] உங்களுக்கு ஜெபம் தேவையாயிருக்கிறது, இல்லையா? [“ஆம்”.] தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நீங்கள் அதை விசுவாசித்து…அதை ஏற்றுக்கொள்வீர்களா? [“ஆம்”] உங்களுக்கு எலும்பு உட்புழைக்கோளாறு உள்ளது. [“ஆம்”] உங்களுக்கு குடற்சரிவு உள்ளது. [“ஆம்.”] அது உண்மை. 217 அங்கே உள்ள உங்களைக் குறித்து என்ன? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] 218 இங்கே இந்த ஸ்திரீக்குப் பின்னால் மற்றொரு கறுப்பு நிற ஸ்திரீ இருக்கிறாள். சகோதரியே உங்களுடைய கரத்தை மேலே உயர்த்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு கர்த்தரிடத்திலிருந்து ஏதோ காரியம் தேவையாயிருக்கிறதா? நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரனென்று விசுவாசிக்கின்றீர்களா? அது ஒரு குரல் சம்மந்தமான கோளாறாய் உள்ளது. நீங்கள் அதனால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறீகள். அது உண்மை. அவர் உங்களை சுகமாக்கி விட்டார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 219 அங்கே உங்களிடத்திலிருந்து வலப்புறமாக பின்னாக நோக்கிப் பார்த்தால் அங்கே உங்களிடத்திலிருந்து வரிசையின் கடைசியில் உள்ள கிட்டத்தட்ட ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து பேர்கள் அங்கே பின்னால் உள்ளவர்கள். உங்களுக்கு குரல்வளை குறுத்தெலும்பு கோளாறு உள்ளது. தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 220 இங்கே பின்னால் உள்ளவரைக் குறித்து என்ன? இங்கே வரிசையின் பின்னால் உள்ள இருக்கையின் கடைசியில் அமர்ந்துள்ள மனிதன். உங்களுக்கு பெருங்குடல் சீழ்ப்புண்ணால் பாதிக்கப்பட்டு வீக்கமடைந்துள்ளது. ஐயா, அது உண்மை. தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் எழுந்து நின்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். 221 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை ஒருபோதும் கண்டதேயில்லை. நீங்கள் எனக்கு ஒரு அந்நியராயிருக்கின்றீர்கள். ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். 222 நீங்கள் ஒவ்வொருவரும் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] இரக்கத்தில் ஆபிரகாமினிடத்திற்க்கு வந்து, சாராளின் சிந்தைகளின் அந்தரங்கங்களை அறிந்த அதே தேவனுடைய தூதனானவர், அதே ஒருவர் இங்கே பூமியின் மேல் நின்று, சிந்தனைகளின் அந்தரங்கங்களை அறிந்து கொள்ள அவர் இப்பொழுது இங்கேயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்க வில்லையா? [“ஆமென்.”] அதே தேவன் உலகமானது ஒரு அழிவில் சுட்டெரிக்கப்படுவதற்கு சற்று முன்னர் மீண்டுமாக, இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா? [“ஆமென்.”] அப்படியானால் நாம் அவரை ஏற்றுக் கொள்வோமாக. நாம் அவரை விசிவாசிப்போமாக. நாம் அவரை நம்முடைய சுகமளிப்பவராக இப்பொழுதே ஏற்றுக்கொள்வோம், உங்களில் எத்தனை பேர் அதை விசுவாசிப்பீர்கள்? 223 உங்களில் எத்தனை பேர் உண்மையாகவே விசுவாசிக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது உங்களுடைய கரங்களை நீங்கள் கீழே விடுங்கள். 224 வேதம், “விசுவாசிக்கிறவர்களால் நடக்கு அடையாளங்கள்” என்றே இதை கூறியுள்ளது. 225 ஆகையால் நீங்கள் விசுவாசிகளாயிருந்தால், உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். உங்களுக்கு அடுத்து உள்ள நபருக்காக நீங்கள் ஜெபியுங்கள். அடுத்த ஒருவர் உங்களுக்கு, ஜெபிக்கின்ற உங்களுக்கு ஜெபிப்பார். நீங்கள் ஒவ்வொருவரும் கட்டிடத்தில் எங்கேயிருந்தாலும், இப்பொழுது ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். நான் இந்த விசுவாசத்திற்கு சவாலிடுகிறேன். அங்கே எலும்புருக்கி நோயோடு உள்ள அம்மாளே, அதைக் குறித்து மறந்துவிடு. நீ சுகமாக்கப்பட்டிருக்கிறாய். 226 ஐயா, அங்கே அமர்ந்திருக்கும் உங்களுக்கு சரீரப்பிரகாரமான பெலவீன கோளாறு உள்ளது. எனவே நீங்கள் இரவு நேரங்களில் எழுந்து கொள்கின்றீர்கள். அதை மறந்து விடுங்கள். இனி நீங்கள் அவ்விதம் செய்ய வேண்டியதாயிருக்காது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 227 நீங்கள் விசுவாசமாய் செயல்ம்படும்படிக்கு உங்களுக்கு சவாலிடுகிறேன். நீங்கள் அதைச் செய்கின்றீர்களா? அப்படியானால் உங்களுடைய சொந்த வழியில் நீங்கள் ஒவ்வொருவரும் ஜெபம் செய்யுங்கள். நான் உங்கள் எல்லோருக்காகவும் ஜெபிக்கையில், உங்களுடைய கரங்களை யாரோ ஒருவர் மீது வையுங்கள். உங்களுக்கு அடுத்தபடியாக உள்ள யாரோ ஒருவருக்காக ஜெபியுங்கள். 228 தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் காரணரே, ஒவ்வொரு நன்மையான ஈவையும் தருபவரே, இந்த ஜனங்களின் மீது இப்பொழுதே உம்முடைய ஆவியை அனுப்பும். 229 நான் பிசாசின் கிரியைகளை கடிந்து கொள்கிறேன். ஏனென்றால் பிசாசு வெளிப்படுத்தப்பட்டான். சாத்தானே நீ இனி ஒருபோதும் அவர்களை பிடித்து வைத்துக் கொள்ள முடியாது. அவர்களுடைய விசுவாசம் உயர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுடைய கரங்களை ஒருவர் மற்றொருவர் மேல் வைத்திருக்கிறார்கள். நீ யுத்தத்தில் தோற்றோடிப் போய்விட்டாய் என்றும், நியாயத்தீர்ப்பு சமீபமாயிருக்கிறது என்றும் நான் உனக்கு சவாலிடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களை விட்டு வெளியே வா. இயேசுவின் நாமத்தில் அவர்களை விட்டு வெளியே போ. 230 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்தி, உங்களுடைய சுகத்திற்காக அவருக்கு துதி செலுத்துங்கள். நீங்கள் ஒரு முடவனாயிருந்தால், உங்களுடைய காலூன்றி எழும்பி நில்லுங்கள். கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். நீங்கள் முடமாயிருந்தால் உங்களுடைய முடமான கரங்களை உயர்த்துங்கள். அது சரியாகிவிடும். இதோ இங்கே முடமான ஒரு ஸ்திரீ எழும்புகிறாள். 231 கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நாம் ஒவ்வொரும், “கர்த்தாவே ஸ்தோத்திரம்” என்று கூறுவோமாக. [சபையோர், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்கிறார்கள். சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஐந்து முறை தட்டுகிறார்.—ஆசி.] ஆமென். சகோதரன் நெவில்.